பக்கம்:அறப்போர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அருந்தவத்தோன்

கடவுள் வாழ்த்துப் பாடுவதில் சிறந்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந்தேவனார் என்ற பெயர் மகாதேவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமானைக் குறித்து அகநானூற்றில் ஒரு பாடலும் புறநானூற்றில் ஒரு பாடலும் அவர் பாடியிருக்கிறார். அப்பெருமானுடைய தோற்றத்தை அவ்விரண்டு பாடல்களிலும் வருணித்திருக்கிறார். புறநானூற்றில் சிவபெருமானை அவர் பாடிய பாடல் முதற் செய்யுளாக அமைந்திருக்கிறது.

சிவபெருமான் இடபவாகனத்தில் எழுந்தருளி வருகிறார். நெடுந்தூரத்திலே வரும் போதே நாம் அன்புடன் பார்க்கிறோம். அப்போது விளக்கமாக எது தெரியும்? அவருடைய திருமுடிதான் தெரியும். நெடுந்தூரத்தில் வருபவனுடைய தலையும் முண்டாசும் தெரிவதுதான் இயற்கை. பெருந்தேவனார் நெடுந்தூரத்திலே உலாவரும் சிவபெருமானைத் தரிசித்து நமக்கும் காட்டுவாரைப் போலத் திருமுடி தொட்டு வருணிக்கத் தொடங்குகிறார்.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/19&oldid=1267379" இலிருந்து மீள்விக்கப்பட்டது