உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருந்தவத்தோன்

குறிப்பதுண்டு. எம்பெருமானுக்குச் சிறந்த கொடியாக உதவுவதும் அந்தத் தூய வெண்மையான ஏறுதான்.

சிவபிரானுடைய மஞ்சள் நிறக் கொன்றைக் கண்ணியுந் தாரும், அவருடைய தூய வெள்ளே ஏருகிய ஊர்தியும் கொடியும் நன்முகத் தெரிகின்றன. இவை அவருடைய திருமேனிக்குப் புறம்பான அடையாளங்கள். அவருடைய திருமேனியைப் பார்க்கவேண்டாமா? சற்று அதைக் கவனிப்போம். .

அது என்ன, அவருடைய திருக்கழுத்தில் கன்னங்கறே லென்றிருக்கிறதே! அது கறுப்பாக இருந்தாலும் பெருமானுடைய திருக்கழுத்தில் அழகாக அமைந்திருக்கிறது. செவ்வண்ணத் திருமேனியில் இந்தக் கறுப்பு சிறம் விட்டு விளங்குகிறது. கழுத்திலே நீலமணி கட்டினல் எவ்வளவு அலங்காரமாக இருக்கும்? அப்படி அணி செய்கிறது. இந்தக் கறை. அழகு செய்வது மாத்திரமா? அங்தக் கறைக்குத்தான் எத்தனை பெருமை இறைவனை நீலகண்டன் என்று யாவரும் பாராட்டுகிருர்களே, அது அந்தக் கறையை நினைந்ததுதானே? தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விடம் எழுந்தது. அது கண்டு அஞ்சி ஓடினர் அமரர். தமக்கு அமுதம் வந்தா-

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/21&oldid=1265827" இலிருந்து மீள்விக்கப்பட்டது