பக்கம்:அறப்போர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருந்தவத்தோன்


கறை, மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே.
பெண்உரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.
பிறை,நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே:
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர்அறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

  • எல்லா உயிர்களுக்கும் இன்பந்தருவதாகிய நீர் என்றும் அறுதலே அறியாத கலசம் போன்ற கங்கையையுடைய தாழ்ந்த சடையினால் விளக்கம் பெற்ற அரிய தவத் திருக் கோலத்தையுடைய சிவபெருமானுக்குத் தலையில் அணியும் அடையாள மாலை, கார் காலத்தில் மலரும் கொன்றைப்பூ; அழகிய செந்நிறம் பெற்ற திருமார்பில் உள்ள மாலையும் கொன்றைப்பூ. அவன் ஏறும் வாகனம் தூய வெள்லையான விடை; சிறப்புப் பெற்ற புகழை உடைய கொடியும் அந்த விடையே என்று ஆன்றோர் கூறுவர். நஞ்சினால் உண்டான கறுப்பு அவன் திருக்கழுத்தை அழகு செய்தது; அந்தக் கறுப்பு வேதத்தை ஓதும் அந்தணர்களால் புகழவும் பெறும். பெண் உருவம் ஒருபாதி ஆயிற்று; அவ்வுருவத்தைத் தனக்குள் ஒரு காலத்தில் மறைத்தாலும் மறைப்பான். பிறை திருநெற்றிக்கு அழகாக அமைந்தது; அந்தப் பிறை பதினெட்டுக் கணத்தினரால் பாராட்டப் பெறவும் படும்.

கண்ணி - முடியில் அணியும் அடையாள மாலை, காமர் - அழகு. வண்ணம் - நிறம். தார் - மார்பில் அணியும் மாலை. ஊர்தி-வாகனம். வால்-தூய. ஏறு - இடபம். என்ப - என்று சொல்வார்கள். கறை - கறுப்பு. மிடறு - கழுத்து. அணிந்தன்று - அணியாக அமைந்தது.

9

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/27&oldid=1460086" இலிருந்து மீள்விக்கப்பட்டது