பக்கம்:அறப்போர்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


இதனால் போர் செய்தலையும் ஒரு கலைபோல எண்ணி அதற்குரிய கருவிகளையும் முறைகளையும் பெருக்கி வருகிறான்.

மனிதனுடைய அறிவு பகைவனை அழிக்கும் திறத்தில் ஈடுபடுகிறது; அதனால் மனித சமுதாயத்தின் போரில் சில நாகரிக முறைகள் அமைகின்றன. மனிதர்களுக்குள் கோபமே வராமல் அடக்கும் சான்றோர்களும், வந்த பிறகும் செயற்படாமல் அமையும் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவு மனித சமுதாயம் ஒன்றனை ஒன்று அழித்துக் கொள்ளும் போரில் ஈடுபடுவதற்கு உடம்படுவதில்லை. இந்த வெறியை எப்படி அடக்கலாம் என்று எண்ணி அதற்குரிய வழி துறைகளை வகுக்கப் புகுகிறார்கள். ஒருபால் போரைத் திறம்பட நடத்திப் பகைவரை அழிக்கும் கலை வளர்ந்து வந்தாலும், ஒருபால் போரே நிகழாமல் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற கருணையும் படர்ந்து வருகிறது. உலகில் எந்தச் சமுதாயத்திலும் கருணையுடைய சான்றோர் மிகச் சிலரே இருக்கக்கூடும். ஆதலின் போர் நிகழ்வது அதிகமாகவும், நிகழாமல் அமைவது குறைவாகவும் இருக்கின்றன. ஆயினும் அந்த நல்லோர்களுடைய அறிவும் கருணையும் போரை அறவே தடுத்து நிறுத்தாவிட்டாலும்,

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/35&oldid=1267408" இருந்து மீள்விக்கப்பட்டது