உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறப்போர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


போரிலும் சில வரையறைகளைக் கடைப்பிடிக்கும்படி செய்தன. வீட்டில் அழுக்குப்படாமல் இருப்பது மிக நல்லது. ஆனாலும் மனிதன் அழுக்குச் செய்கிறான். வீடு முழுவதும் அழுக்கடையும்போது அதை அலம்புகிறோம். கழுவிய நீரைப் பல இடங்களிலும் பரவவிடாமல் ஓரிடத்தில் விட்டு அதற்கு எல்லை கோலிச் சாக்கடை ஆக்குகிறோம். மனித சமுதாயத் திலும் அழுக்கு முழுவதையும் தடுக்க வகையில்லாவிட்டாலும் பலவகை அழுக்குகளை வரையறைக்கு உட்படுத்தி வெளிப்படுத்தும் சாக்கடைகளைப் பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.

இதனால் தான் போரிடுபவர்களிடையிலும் சில விதிகள் இருக்கின்றன. போர் செய்வதற்கும் சில சட்டங்கள் உலகத்து நாடுகள் பலவற்றுக்கும் பொதுவாக இருக்கின்றன. தனி மனிதன் தனி மனிதனைக் கொலை செய்யும் திறத்தில் ஒரு வரையறையும் இல்லை. அதை அறவே விலக்கவேண்டும் என்று எல்லோருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகவே கொலை செய்வது குற்றமாகிவிட்டது. ஆனால் தொகுதியாகச் சேர்ந்து கொலை செய்யும் போர் குற்றமாகவில்லை. ஞானிகளுக்கும், மனிதப் பண்பை வளர்ப்பவர்களுக்கும் அது குற்றமாகவே

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/36&oldid=1267409" இலிருந்து மீள்விக்கப்பட்டது