பக்கம்:அறப்போர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தப் பெயரால் அழைப்பது பெரும்பாலும் வழக்கமன்று. பெரியவர்கள் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதையன்று என்று பழங்காலத்தில் எண்ணினார்கள். இந்தக் காலத்தில் கூடப் பிள்ளையவர்கள், தாசீல்தார் ஐயா என்று சொல்கிற வழக்கம் இருக்கிறதல்லவா? நெட்டிமையார் என்ற புலவருக்கு அவருடைய தாய் தந்தையர் வைத்த பெயர் இன்னதென்று நமக்குத் தெரியாது. அவருக்கு நீண்ட இமைகள் இருந்தமையால் அந்த அடையாளங்கொண்டு அவரைக் குறிப்பது வழக்கமாகப் போயிற்று. இப்படி உறுப்பினால் பெயர் வைத்து வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலிருந்து கூடத் தெரிகிறது. நெடுங்கழுத்துப் பரணர், பரூஉ மோவாய்ப் பதுமனார், தங்கால் முடக்கொல்லனார், முடமோகியார் என்று உறுப்புக்களைக் கொண்டு புலவர்களைச் சுட்டும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. இதில் ஒரு சிறப்பு உண்டு. உறுப்புக் குறையைச் சுட்டி இத்தகைய பெயர்கள் வரும் போது, அந்தப் பெயர்கள் இழிவான பொருளைத் தரவில்லை. உறுப்பிலே குறை நேர்வது மனிதனுடைய செயல் அல்லவே. அப்படி இருக்க அதனை இழிவாகக் கருதுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்! தமிழர்கள் உறுப்புக் குறையை

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/45&oldid=1267419" இலிருந்து மீள்விக்கப்பட்டது