பக்கம்:அறப்போர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


உள்ள உயிர்கள் அத்தனையும் வாழவேண்டுமென்று நினைப்பவர். ஆனால் போர் என்ற ஒன்று மற்ற நாட்டினரை வாழாமல் அடிக்கிறது. அதை நடவாமல் நிறுத்த முடியுமா ? ஆனாலும் அந்தப் போரிலும் அறநெறி. ஒன்றைப் பின்பற்றி, அந்த அறத்தாற்றிலே நடப்பது சிறப்பல்லவா? அந்தச் சிறப்பு முதுகுடுமியிடம் இருக்கிறது. ஆகவே அவனுடைய இயல்புகளில் அறத்தாற்றின் வழியே போர் செய்யப் புகும் கொள்கையைச் சிறப்பிக்கலாம் என்று தோற்றியது. பாட ஆரம்பித்தார்.

போர் செய்யப் போவதைப் பகை நாட்டில் உள்ளோருக்கு அறிவிக்கத் தலைப்பட்ட முதுகுடுமி தீங்கு செய்யத் தகாதவர்களென்று யார் யாரை நினைத்தான்? முதலில் ஆவை நினைத்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் தீங்கு செய்யத் தகாதது அது. தன் கன்றை ஊட்டுவதற்கு அமைந்த பாலால் உலகையும் ஊட்டும் தன்மை உடையது. அதற்கு அடுத்தபடி தம் நலத்தைச் சிறிதளவே கருதிப் பிறர் நலத்தைப் பெரிதாகக் கருதி வாழும் அந்தணர்களை நினைத்தான். தன் கன்றுக்குச் சிறிதளவு பால் தந்து பெரிதளவு பாலைப் பிறருக்கு வழங்கும் ஆவைப் போன்-

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/47&oldid=1267421" இலிருந்து மீள்விக்கப்பட்டது