பக்கம்:அறப்போர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




முகவுரை

ஆயினும், அவ்வாறு துறை வகுப்பது கூடாது என்பது நட்சினார்கினியர் கருத்து. 'தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்று அறிக’ என்று அவர் எழுதுகிறார். தொல்காப்பியப் புறத்திணை இயல் உரையில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோள் காட்டும் இடங்களிலெல்லாம் அவர், இதில் உள்ளபடி சொல்லாமல் வேறு திணை துறைகளை அமைத்துக் காட்டுகிறர்.

புறப்பொருள் வெண்பா மாலேயின்படி அமைந்த புறத்தினேகள் வருமாறு:

வெட்சி: பகைவர் ஆநிரையைக் கவர்தல்.
கரந்தை: பகைவர் கவர்ந்த ஆவிரையை மீட்டல்.
வஞ்சி: பகைவர் நாட்டைக் கைப்பற்ற எண்ணிப் போர் செய்யப் புறப்பட்டுச் செல்லுதல்.
காஞ்சி: போர் செய்வதற்கு வந்த மன்னருக்கு எதிரே பகையரசர் செல்லுதல்.
நொச்சி: புகைவர் தம் மதிலே முற்றுகை யிட்டபோது மகிலைக் காத்தல்.
உழிஞை: பகைவருடைய மதிலை முற்றுகையிடுதல்.
தும்பை: பகைவரோடு ஊக்கத்துடன் போர் செய்தல்.
வாகை: பகைவரை வெற்றி கொள்ளுதல்.
பாடாண்திணை: ஒருவனுடைய புகழ், வலிமை, ஈகைத் திறன் முதலியவற்றைச் சிறப்பித்தல்.
பொது இயல்: முன்னே சொன்னவற்றிற்குப் பொதுவானவையும் பிறவுமாகிய செய்கிகள்.
கைக்கிளை: ஒருதலைக் காமம்.
பெருந்திணை: பொருந்தர்க் காமம்.

இந்த முறையைச் சார்ந்த துறைகளேயே புறநானுற்றுச் செய்யுட்களின்பின் பழங்காலத்திலிருந்து குறிப்-

iii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/7&oldid=1265813" இலிருந்து மீள்விக்கப்பட்டது