பக்கம்:அறவோர் மு. வ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

105

கூறல் என்னும் இருவகைப்பட்ட, பொதுவான நோக்கு நிலையையே மு. வ. வும் கையாண்டுள்ளார். இவற்றுள் பாத்திரம் கதை கூறிச் செல்லும் நிலை அவரது கதைகளில் மிகுதியாகவும், ஆசிரியர் கதை கூறும் நிலை சிறுபான்மையாகவும் அமைகின்றது.

கதைக்கரு

மு.வ. சிறுகதைகளில் கதைக் கரு, காந்தியநெறியையும், அன்புநெறிறையும் வலியுறுத்துவதாக அமைகின்றது. மூட நம்பிக்கையைச் சாடல், தளிமனிதனைத் திருத்தும் நோக்கு, செல்வர்களின் கொடு மனத்தைச் சாடல், ஏற்தத்தாழ் வற்ற சமுதாயம் உருப்பெற வேண்டும் என்னும் வேட்கை ஆகியனவும் அவரது கதைகளின் கருவாகியுள்ளன்.

வருணனை, இலக்கியமேற்கோள்

பொதுவாக, சிறுகதைகளில் வருணனை, இலக்கிய மேற்கோள் முதலியன மிகுதியாக இடம் பெறுதல் இல்லை. நிகழ்ச்சியின் விரைவையும் அது தருகின்ற உணர்வுச் சுழிப்பையும் வருணனை, இலக்கியப்பகுதி போன்ற கூறுகள் சிதைத்துவிடக்கூடும். எனவே, இவை சிறுகதைகளில் பெரிதும் போற்றப்படுவதில்லை. மு. வ. வின் சிறுகதைகளில் இவ்வருணனை மற்றும் இலக்கியப்பகுதி அளவாகவே அமைந்துள்ளன. 'குறட்டை ஒலி' சிறுகதைத் தொகுதியில் மலை, ஊர், வயல் ஆகிய இயற்கை வருணனைகளும், கதை மாந்தர் உருவ வருணனையும் இடம் பெற்றுள்ளன. இலக்கிய மேற்கோளாக 'கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' என்னும் ஒரு பகுதி மட்டுமே அதிலும் ஒரடி மட்டுமே குறட்டை ஒலி கதைத் தொகுதியில் இடம் பெறுகின்றது.

உரையாடல்

சிறுகதையின் வெற்றிக்கு அதில் அமையும் உரையாடலும் ஒரளவு உதவுகின்றது. உரையாடல் கருத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/108&oldid=1224133" இலிருந்து மீள்விக்கப்பட்டது