பக்கம்:அறவோர் மு. வ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

125



பாத்திரப் படைப்புகளை நுணுகிக் கண்டு அவர்களின் வாழ்வினைத் திறனாய்வு நோக்கில் பார்த்து உண்மை தெளியும் திறம் மு.வ. அவர்களுடையது. ‘மாதவி’ என்ற நூலில் மாதவியின் பண்பு நலங்களை அவர் விளக்கும் போக்கு, புதுமையும் புரட்சியும் உடையதாகும்.

“கண்ணகியின் வாழ்வு கணவனுக்காகவே வாழ்ந்து கணவனுக்காகவே முடிந்தது. மாதவியின் வாழ்வு காதலின் நின்று பிறகு அதையும் கடந்து அறத்துறையில் சென்றது. மனம் மாறிய மாதவி பிறந்த குடும்பத்தின் தீமையை வேருடன் களைந்தாள்: அதுபோன்ற மற்றக் குடும்பங்களின் சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாக விளங்கினாள்; பெரும் புரட்சி செய்தாள்; கலையின் வளர்ச்சிக்காக மங்கையர் சிலரின் வாழ்வைக் கெடுக்கும் மடமையைக் கொளுத்தினாள். அரசன் திகைக்க, ஊரார் வியக்க, சுற்றத்தார் இரங்க, பெற்ற தாயும் வருந்த, சீர்திருத்தம் செய்தாள். கணிகையரின் வாழ்வுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை நாடு அறியச் செய்தாள். தன் வயிற்றில் பிறந்த மணிமேகலையைத் தமிழகத்தின் தவச்செல்வி ஆக்கினாள். சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குதல், அமுத சுரபி ஏந்திப் பசிப்பிணி தீர்த்தல் முதலிய அறப்பெருஞ் செயல்கள் செய்து தொண்டு ஆற்றி, உலகப் பெருமாதரில் ஒருத்தியாக விளங்கிய மணிமேகலையைப் பெற்ற தாய் என்று உலகம் புகழுமாறு உயர்நிலை உற்றாள் மாதவி” என்று அவர் கூறுந் திறம் பாத்திரங்களையே விளக்கும் தன்மைத்தன்றோ!

படைப்பு எழுத்தாளர் (Creative Writer) என்ற வகையில் மு.வ. இந்நூற்றாண்டிற் சிறக்க விளங்கியதனால் அவர் எழுதிய இலக்கிய நூல்களுக்குக் கூடப் படைப்பிலக்கியத்தின் தகுதிகள் சிலவற்றைப் புகுத்தி விளக்கினார். சிறு கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயத்தைப் போல இருக்கவேண்டும் என்பர். தொடக்கம் கருத்தைக் கவர்ந்து மனத்தைச் சுண்டியிழுப்பதாக இருக்க-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/128&oldid=1224196" இலிருந்து மீள்விக்கப்பட்டது