பக்கம்:அறவோர் மு. வ.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 153

பெண் எவ்வாறு இருக்க வேண்டும்!

“இளமையிலிருந்தே நீ அறிவும் திறமையும் அன்பும் பணிவும் உள்ள பெண்ணாக விளங்கியதைக் கண்டிருக்கிறேன். அல்லவா?”16

“பிறரிடம் கொள்ளும் விருப்பு வெறுப்புக்களில் பிடிவாதம் காட்டாதே. இதில் பிடிவாதம் பெருந்தீங்கு உண்டாக்கும். ’பெண்கள் பிடிவாதமானவர்கள்; நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள்’ என்று பழிச்சொல் இருக்கிறது. அதை மாற்றிவிடு. அன்புக்காக விட்டுக்கொடுப்பவர்கள் பெண்கள் என்பதை உன் வாழ்வில் புலப்படுத்து.”17

காலத்திற்கேற்பப் புதிய நோக்கில் பெண்களைப் பார்த்து, பழமையிற் கொள்ள வேண்டியனவற்றைக் கொண்டு, புதுமையில் போற்றி நிற்க வேண்டுவனவற்றையும் டாக்டர் மு. வ. அவர்கள் விடாது குறிப்பிடுகின்றார் என்பதனை நூலின் பலவிடங்களிலும் காணலாம்,

இல்வாழ்க்கை

கணவன் மனைவியர் இணைந்து வாழும் இல்வாழ்க்கை குறித்து டாக்டர் மு. வ. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

”இல்வாழ்க்கை என்பது முன்காலத்தில் ஒரே பொருளை விற்கும் வெல்ல மண்டிபோல் இருந்தது. நாகரிகம் பல வகையில் கடமைகளைப் பெருக்கியுள்ள இந்தக் காலத்து இல்வாழ்க்கை பலசரக்குக் கடைபோல் ஆகிவிட்டது. பல பொருள்களையும் கவனித்து விற்கும் திறமை இல்லா விட்டால் பலசரக்குக் கடையில் வாழ முடியுமா? நாம் பலருடைய வாழ்க்கையில் கலந்திருக்கிறோம். பலர் நம்முடைய வாழ்க்கையில் கலந்திருக்கிறார்கள். ஆகையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/156&oldid=1462064" இலிருந்து மீள்விக்கப்பட்டது