பக்கம்:அறவோர் மு. வ.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 அறவோர் மு. வ.

கடமைகள் பலவாகிவிட்டன. இந்தக் காலத்தில் ஒரு இன்பத்தையோ ஒரு குறையையோ எண்ணித் தலை மேல் கை வைத்து உட்கார்ந்து விட்டால், யாரும் முன்னேற முடியாது. அவர்களை நம்பியவர்களும் கடைத்தேற முடியாது. நன்மை தீமை, இன்பம் துன்பம், குணம் குற்றம், நிறை குறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, எதற்கும் தயங்கி நிற்காமல் ஓடுகின்ற கடிகாரம் போல் கடமைகளை அஞ்சாமல் செய்கின்றவர்கள்தான் இந்தக் காலத்தில் தலைமைப் பதவிக்குத் தக்கவர்கள். குடும்பத் தலைவியும் இப்படி இருந்தால்தான் வாழ்வு நன்றாக நடக்கும். யாராவது தன்னைக் குறை கூறினார்கள் என்றால், அதையே எந்நேரமும் எண்ணிக்கொண்டிருப்பது, “யாராவது நோயால் வருந்துகிறார்கள் என்றால், எந்நேரமும் அவர்களையே நினைந்து உருகுவது; இவ்வாறு வாழ்வது கூடாது.”18 .

பிறர் உள்ளம் அறிந்து நடப்பது ஒர் அரிய கலை, பெண்ணுக்கு அது கட்டாயம் வேண்டும் என்று நான் எண்ணும்போது, அந்தக் கலையால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிலர் நினைவுக்கு வருகிறார்கள்19”...... என்று கூறி,

“இந்த அறிவுரைக்கும் ஒர் எல்லை உண்டு, அதை மறந்துவிடாதே” என எச்சரித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:

”அதாவது, உள்ளம் அறிந்தொழுகும்போது, ஒரு துறையில் கணவன் விருப்பத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்பது குடும்பத்திற்குத் தீமையாக இருந்தால், அப்போது இந்த அறிவுரையைக் கடந்து வாழவேண்டும். கணவனுக்குக் கத்தரிக்காய் விருப்பம் என்றால், அதையே கறியாக்கலாம்; கத்தரிக்காய் வறுவல் விருப்பம் என்றால் அதை அவ்வாறே செய்யலாம். ஆனால் அதுவே அவருடைய உடல் நலத்திற்கு ஆகாததாக இருந்தால், அப்போதும் அதைச் செய்யலாமா? கூடாது. உணவைப்போலவே, மற்றத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/157&oldid=1462065" இலிருந்து மீள்விக்கப்பட்டது