பக்கம்:அறவோர் மு. வ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

69


கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடந்தருகின்ற சாய்க்கடைகளையும், தேக்கங்களையும் ஒழித்துச் சீர்படுவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை..."3
(அல்லி, பக். 145-46)

இச்சிந்தனை டாக்டர் மு. வ. வின் மனப்பார்வையையும், சமுதாய நலவுணர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதோடு, சமுதாய மேம்பாட்டு வேட்கையினையும் வெளிப்படுத்துகிறது.

டாக்டர் மு. வ. வின் படைப்புகளை ஆழ்ந்து நோக்கும் போது, சமுதாய நிலையைச் சித்திரித்துக் காட்டுவதில் சமுதாயக் கலைஞராகவும், நெறிமிக்க சமுதாயத்தை உருவாக்கும் கருத்துக்கலன்களை வழங்கும்போது, சமுதாய மருத்துவராகவும் விளங்குகின்றார்.

'தற்கால உலகில் நம்மிடையே எழும் பல்வேறு சிக்கல்களும் இனிமேல் நாவல் மூலம்தான் விவாதிக்கப் போகிறோம். எதிர்காலத்தில் சமூகத்தொடர்பான சிக்கல்களை விவாதிக்கின்ற மேடையாக நாவலே திகழப் போகிறது' என்னும் எச். ஜி. வெல்சு கூற்றிற்கிணங்க, டாக்டர் மு. வ. வின் படைப்புகள் அனைத்தும் சமுதாயச் சித்திரிப்பின் கலைக்கூடமாகவும், சமுதாயச் சிக்கல்களின் ஆய்வுக்கூடமாகவும் திகழ்கின்றன.

கலைக்கோட்பாடு

'கலை கலைக்காகவே’, ‘கலை வாழ்வுக்காகவே’ என்னும் கோணங்களில் கலையின் நோக்கத்தை அணுகுவோர் உண்டு. டாக்டர் மு. வ. கலை வேறு, வாழ்க்கை வேறு என்று கருதியவர் அல்லர். அவர் வாழ்க்கையையே கலையாகக் கருதியவர். மற்ற எல்லாக்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/72&oldid=1239813" இலிருந்து மீள்விக்கப்பட்டது