பக்கம்:அறவோர் மு. வ.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

91


வருணனை

நாவலாசிரியரின் கலைத்தன்மையையும் காவியத்தன்மையையும் வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியும் கூரிய நோக்கும் வாய்ந்த ஒரு கூறாகும் வருணனை. இயற்கை வழிப்பட்ட நெஞ்சினரான டாக்டர் மு. வ. தம் நாவல் களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயற்கை வருணனைகளை உத்திகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

இயற்கை வருணனை

டாக்டர் மு.வ. வின் வருணனை இயற்கைக் காட்சியைக் காட்டும் எழில் வருணனையாக மட்டுமன்றி, நாவலில் இடம் பெற்றுள்ள பாத்திரத்தின் எண்ண வருணனையாகவும் அமைந்துள்ளது.

"அந்தப் பனைமரத்தில் அணில்கள் இரண்டு ஆடி விளையாடிக் கொண்டிருந்தன."

"மைனா இரண்டு அந்தப் பனைமரத்தில் வந்து உட்கார்ந்து ஏழிசையும் பாடின. "

"அந்தக் குருவிகள் இரண்டு இரண்டாய் - இணை இணையாய் நிலத்தில் உள்ள புழு பூச்சிகளைக் கொத்திக் கொண்டிருந்தன."

"மறுபடியும் வண்ணாத்திக் குருவிகள் வந்து குதித்துக் குதித்து நிலத்தைக் கொத்திக் கொத்தி ஆடின." (பாவை)

பாத்திர வருணனை

"வழுக்கைத் தலையும் குழிவிழுந்த கண்களும் அவர் தொழிலிலிருந்து ஒய்வு பெற இன்னும் இரண்டே ஆண்டுகள் இருந்தமையால், 'எப்படியாவது போகட்டும்! என்ன செய்வது?’ என்ற தத்துவப் படியை அடைந்தார்."

இது 'கயமை’ எனும் நாவலில் இடம்பெற்ற 'வெங் கோபர்’ என்ற பாத்திரம் குறித்த வருணனை. இவ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/94&oldid=1224083" இலிருந்து மீள்விக்கப்பட்டது