பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


பாவை பாதை காட்டுதல்“சீவனைத் தின்று சீவன் சீவிக்கும் உலகில், சேரக்
காவினில் காவ லின்றிக் கனிகண்ட போதும் கூடத்
தேவனைக் குறையி ரந்து தின்றபோ தன்றித் தீராப்
பாவமே நேரும்! பண்பாய்ப் பசியாறும் முறையிஃ தென்றாள்.

இதயமொன்றினால் இன்பமொன்றுமோ எனல்“பதியொன்றிப் பார்வை யொன்றிப் பகலிர வொன்றிற்

றென்ன

மதியொன்றி மாண்பு மொன்றி, மலர்மண மொன்றிற் றென்ன
விதியொன்றி வேளை யொன்றி, வினைபய னொன்றிற் றென்ன
இதயங்க ளிரண்டு மொன்றின் எய்துமோ இன்பம்?” என்றான்

நிற்பதற்கு நேரமில்லையெனல்பொற்பொடு புருவம் கோணிப் புன்னகை புரிந்து. “பூவாக்
கற்பனை செய்த வாறே கண்மூடிப் படுத்தி ருங்கள்!
பற்பல செயல்கள் வீட்டில் பண்ணாமல் கிடக்க இங்கே
நிற்பதற் கில்லை” யென்றே நேரிழை விரைந்த கன்றாள்.

மனைத்தலைவிநத்தினில் முத்தாய் வீட்டில் நல்லொளி நல்கா நின்ற
உத்தமி! ஊறுற் றோர்கட். கூன்றுகோல்! உலர்ந்தார்க் கன்னை!
பத்தினிப் பாவை! பேசும் பைங்கிளி! பண்பா ளன்நம்
சத்தியன் வாழ்வுக் கேற்ற சரிநிகர்த் துணைவி கண்டீர்!

வீணுக்குப் பிறந்து வாழ்ந்து வெறுமனே இறப்பார்க்குள்ளே,
பூணுக்குப் பொன்னைப் போன்றாள்; பூவுக்கு மணமும்

போல்வாள்;

ஆணுக்குப் பெண்ணே வாழ்வில் அனைத்துமென் றறிவாள்;

பேரும்

மாணிக்கம்! மகளிர் சூடும் மணங்கமழ் மலரவ் வூர்க்கே!