பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

"நாளொன்று தவறா துன்னை நனெதிர்‌ பார்த்தேன்‌ வேணி!
ஆளொன்று வைத்தா ளண்ணி அனுதினம்‌ சமக்கச்‌ சோறு
தாளின்று கறுகு மாறாய்த்‌ தகித்திடும்‌ வெயிலில்‌, மேனி
தூளொன்றி வியர்வை பூத்துத்‌ துளித்திட வரலேன்‌?" என்‌றான்‌.

வேணி விவரித்தல்‌


"தேமாவும்‌ தேனும்‌ தேவை; தேசிகன்‌ கடைக்குச்‌ சென்றான்‌ .
மாமாவந்‌ துள்ளார்‌, மற்றிம்‌ மருமானை மணக்கச்‌ செய்யத்‌
தாமாக அன்று; தங்கள்‌ தமயனார்‌ தனித்து வேண்ட!
சீமானின்‌ மகளைச்‌ சேர்த்துச்‌ சிறந்தினித்‌ திகழ்க!" என்றாள்‌.

நித்தியன்‌ நிலையுரைத்தல்‌


உணும்நேரம்‌; பசியும்‌ கூட! உரைத்தஇவ்‌ வார்த்தை கேட்டுக்
கணதநேரம்‌ அயர்ந்தோ னாகிக்‌ கவலையோ டிருந்தான்‌; "காக
னணம்நேரு மெனினும்‌, வேணி! பகைநேரு மெனினும்‌ கூட,
மணம்நேர லுன்னோ டன்றி மற்றையோ ருடனன்‌" றென்றான்‌.

அக்கா தம்‌ பக்கமெனால்‌


'தங்கமென்‌ றுந்தங்‌ கந்தான்‌, தாமிர மாகா' தென்றன்‌
தங்கள்வா யுதிர்த்த சொல்லோர்ந்‌ துளத்தில்வைத்‌ துவந்தே னேனும்‌,
மங்குலாய்‌ மாமா சூழ்ந்தால்‌ மதிமாயக்‌ கூடு' மென்றின்‌
இங்குமை யெச்ச ரித்தற்‌ கேவினா ளக்கா” * வென்றாள்‌.

நானதை நதம்பேனெனல்‌


மூதலாவ திடையூ றாகி முளைத்தவ ளண்ணி! முற்றி
திலான இடையூ றண்ணன்‌! அதன்பிற கின்று மாமா
திலாவ தென்னை மாட்டி யிசிப்பதற்‌ கேங்கு மண்ணி
யதிலாவ' ளெனின்‌நீ, நம்பும்‌ பக்தன்நா னாகே" னென்றான்‌.