பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை


'தினமணி கதிர்' சென்னை


விந்தன்


அருமை நண்பர் திரு. கலைமணி அவர்கட்கு

வணக்கம்.

நேற்றிரவே தங்கள் நினைவஞ்ச்லியைப் பாதிக்குமேல் படித்து விட்டேன். மற்றவற்றை இன்றிரவு படித்து முடித்த பின்னரே இந்தக் கடிதத்தை எழுத வேண்டுமென்று முதலில் நினைத்தேன். அதற்குள் மனத்தில் பட்டதை எழுதிவிட வேண்டும் என்ற ஏதோ ஒர் உள்ளுணர்வு - எழுதுகிறேன்.

இதற்கு முன் தங்களையோ, தங்கள் எழுத்தையோ, நான் பார்த்தவன் அல்ல, படித்தவன் அல்ல. என்றாலும், எவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் சில இடங்களில் உலகப் புகழ் பெற்ற கவிஞர் தாகூரின் கீதாஞ்சலியைக் கூடக் கருத்துச் செறிவில்; சொல்லாட்சியில் தூக்கியடித்திருக்கிறீர்களே!

தங்கள் நினைவஞ்சலி அருமையான நடைச் சித்திரம்!” இந்த நடைச் சித்திரத்தைத் தமிழில் முதன் முதலாகக் கையாண்டு பார்த்தவர் அம்ரர் வ.ரா. அவர் அதில் அவ்வளவு வெற்றி பெற்றார் என்று கூற முடியாது.

அவரைத் தொடர்ந்து, தாம் நடத்திய - நட்சத்திரம்' என்ற ஏட்டில் நடைச் சித்திரங்கள் சிலவற்றை எழுதிப் புகழ் பெற்றார்; காலஞ்சென்ற இளங்கோவன்.

மூன்றாவதாக, எனக்குத் தெரிந்த வரை தாங்கள் தான் அந்த நடைச் சித்திரத்தை, அறிஞர் அண்ணா நினைவஞ்சலியில் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.