பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#42 அறிஞர் அண்ணா நினைவஞ்சலி

வீரத்தை அவர்களிடையே விளையாட் விடுகிறாய்! வாழ்க நீ வாழ்க!

மக்கள் சிந்தையணு ஒவ்வொன்றும் மொழி உணர்வு கொண்டு, பொதிகையிலே உன்னுடன் பிறந்த தமிழனங்கைப் போற்றிப் பாதுகாக்க வந்த செல்வமே தென்றலே! வாழ்க நீ பல்லாண்டு:

தமிழகத்தின் பேரறிவுப் பெட்டகமே! பெரும் நிதியே! உன் புகழ் தமிழ் உணர்வு பெற்றவர்களின் வீடுதோறும் திரு விளக்காய் திகழ்கின்றது.

எந்த நாட்டிலும் தோன்ற முடியாத தென்னாட்டுத் தென்றலே! அறிவுலகசோதியே! காஞ்சி நகர் வாழ் தென்னலே!

தென்றலையொத்த உமது அரிய சேவையை நாங்கள் உணர்ந்தோம்! நாடும் கண்டு களி பேருவகை கொள்கிறது.

இயற்கையின் செல்வமே! தென்றலே! உன்னைப் பாராட்டு கிறோம்! வாழ்த்துகிறோம்! நீ பிறந்த நாட்டிலே உனக்காக, எமது மூச்சுள்ள வரை. நாங்கள் விழாவெடுக்கிறோம்.

அண்ணா! உன் சதுக்கமே எமக்கெலாம் திருக்கோயில்: தென்றலே! அன்பு தெய்வத்திற்கு ஏன்? எம் அறிவிற்கும் கவரி வீசு!

eğe စီး ఇః