பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. அண்ணா ஒரு கதிரவன்!

கதிரவனே, நீ வந்தாய்!

நான் முளைக்க ஆரம்பித்தேன்!

நான் காலையா? மனத்தின் மலரா? இனம் புரியாத காலமா? உனது கிரணங்களால், எனது யாழ், சோலைக்கு நடுவில் மின்னுகிறது.

உனது வரவால், என்னில் பூட்டியிருக்கிற தந்திகள் மீட்டாமலே பாடுகின்றன!

எனது ஜீவன், உனக்கு முன்பேயே கடன்பட்டிருக்கின்றது! கடன் வாங்கியவன் அதைத் திருப்பித் தரவேண்டும்.

ஏ, இளம் கதிரே, திக்கெட்டும் ஒளிப் பிழம்பை விரவிவரும் உனது திருமுகத்திற்கு முன், என்னுடைய அடிமைத்தனம் மறைந்தொழிகின்றது!

உனக்கு இருக்கும் நூறு கோடி கதிர்க் குதிரைகளைக் கருணையோடு என் சாம்ராஜ்யத்தில் புகுத்து, தாழ்ந்து போயிருக்கும் என் மானம், முளை விட்டுக் கிளம்பும் விதைக் குருத்தைப் போல கொஞ்சம் நிமிரட்டும்.

உனது வழக்கமான செம்முகத்தை எனது சிந்தனைக் கிளிகள், கொவ்வைப் பழம் என்று கடிக்க ஆரம்பிக்கின்றன!