உளம் நினை மணம் தரு மலர் (மனோரஞ்சித மலர்) என்ற ஒன்று உண்டு. அதை எடுத்துக் கொண்டு, நாம் எந்த மலரின் மணத்தை விரும்புகிறோமோ அம் மணத்தை அது கொடுக்கு மாம். மல்லிகையை நினைத்தால் மல்லிகை மணம், உரோசாவை நினைத்தால் உரோசா மணம் என, எல்லா நறுமண மலர்களின் மணத்தையும் அது நல்குமாம்! பல்வேறு நறுமண மலர்களின் கலவை மணமாக, மிகச் சிறந்த மணமாக அது விளங்குகிறது என்பதை, இவ்வாறு பெருமைபடக் குறிப்பிடுவர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மனோரஞ்சித மலர். ஆற்றல்மிகு பேச்சாளர். அழகு தமிழ்க் கட்டுரையாளர். சிந்தை யள்ளும் சிறுகதை எழுத்தாளர், புகழ்மிக்க புதின ஆசிரியர், நயமிகு நாடக ஆசிரியர், அறிவு நலஞ்சான்ற அரசியலாளர், பார்போற்றும் பண்பாளர் - என, யார் எந்நிலையில் நோக்கினாலும், அவ்வந் நிலையில் மிக உயர்ந்த வராகக் காட்சியளிப்பவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!
புலவர் என்.வி. கலைமணி அவர்கள், அண்ணாவைக் காலமாக, ஞாயிறாக, நிலவாக, வானவில்லாக, அருவியாக, தென்றலாக என இயற்கைப் பொருள்களாகக் கண்டு, அவ் வியற்கைப் பொருள்களின் தன்மைகளை அண்ணா பெற்றிருக் கும் பாங்கினைக் கூறுகின்ற புகழ் மொழிகளே 'அறிஞர் அண்ணா நினைவஞ்சலி' என்னும் இந்நூலாக உருவாகியுள்ளது.
எழுதுவோர் பல வகையினர், ஒரே பொருளை நோக்குபவர் தம் கருத்துக் ஏற்ப வெவ்வேறு வகையிலே அதனை எழுதுவர் என்பதை, அண்ணா, ஓர் அருமையான் எடுத்துக் காட்டு தந்து