34
எழுத முடியவில்லையே....!
அன்னைத் தமிழை அரியாசனம் ஏற்றியவர்; தன் தாய்நாட்டிற்கு தமிழ் நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த் தாயின் தலைமகன்; பேரறிஞர் அண்ணா பற்றி புலவர் என்.வி. கலைமணி படைத்திருக்கும் படைப்பிலக்கியமே "நினைவஞ்சலி".
எழுதியவர், தொடக்கத்திலேயே சாகும்போதும் அண்ணா புகழ்பாடி சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்துவேக வேண்டும்' என்று சொல்லி தனக்கு அண்ணாவிடம் உள்ள ஈடுபாட்டை அறிவித்து விடுகிறார்.
அதே எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை, இதற்கு முன்னுரை எழுதச் சொன்ன ஆசிரியருக்கு என் நன்றி.
அண்ணா ஒரு காலம்,
அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி,
அண்ணா ஒரு வானவில்,
அண்ணா ஒரு ஜனநாயகம்,
அண்ணா ஒரு கடல்,
அண்ணா ஒரு தமிழ்ப் பூமாலை,
அண்ணா ஒரு தென்றல்,
அண்ணா ஒரு கதிரவன்,
அண்ணா ஒரு நிலா,
அண்ணா ஒரு குமிழி,
அண்ணா ஒரு தொடுவான் என,
வெவ்வேறு தலைப்புகளில் தன் பாட்டுடைத் தலைவனின் குண நலன்களை புலவர் கலைமணி படைத்து மகிழ்கிறார், மகிழ்விக்கிறார்.