பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


இந்த இலக்கியத்திற்கு முன்னுரை எழுதுவது மிகமிகக் கடினம். ஆம், இந்தப் படைப்பிலக்கியத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் முன்னுரை எழுத வேண்டும்!

முடிகிற காரியமா அது? ஆனால், சுவைத்தவன் ஒரிரு சுவைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும். இதோ படியுங்கள் :

நீர் வீழ்ச்சி என்னைக் குடி என்றது. அண்ணாவைக் குடித்தவன் தாகம் தணிக்கப்படுகிறான்! தென்னகத்தின் பேரறிஞரை கவனி.

அமைதிக்கு அடைக்கலம் தந்து - அரசியலுக்கு புத்துருவம் அளித்தவர், 'குறள் படித்த இந்த மூதறிஞன் விரல், தொட்ட இடமெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்' 'கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர, கரிக்கிறதே கடலென்று கருதி - கடல் மீது போர் தொடுக்கக் கூடாது!

அண்ணாவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமே யன்றி, அவர் கட்சித் தலைவர் என்பதற்காகப் புறக்கணிக்கக் கூடாது; அது புத்திசாலித்தனமுமன்று!’

'அண்ணா விதையாக இருந்து - அவரே விருட்சகமாக ஆனவர்.

வானமாக இருந்து தொடுவானாக வளைந்தவர். வரியாக இருந்து வரலாறாக முடிந்தவர்.

ஒளித் துளியாக இருந்து, ஒசையாக லயம் கலந்தவர் ஒளிக்கொழுந்தாக இருந்து பிழம்பு துணியின் வருடலாக நீண்டவர்.

துளியாக இருந்து பிரளயமாகப் புரண்டவர்.

'அண்ணா மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை.

கீழே, புல்லாக பூண்டாக கிடப்பவர்களுக்கு நுணுக்கமான விஷயங்களை அறிவித்தவர்.