பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அறிஞர் அண்ணா நினைவஞ்சலி

ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது!

விசித்திரமானவள் நீ! என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே!

அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது கொக்கு:

தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னைவிட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது?

பூண்டு

இனியவளே! இன்பத்தின் அகராதியே! ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்! எங்கே என்று கேட்கிறாயா; என்னை! இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது!

என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!

தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும்.

அதை நீயும் தானே பார்த்தாய்!

பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் - அது முட்டைகளை இட்டது!

தவளையை அதற்குப் பிறகு காணவில்லை! வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது!

எப்படியோ முட்டைகள் பாறையில் இடுக்கில் சென்றன! வசந்தமும் - கோடையும் மாறி மாறி வந்தன!