பக்கம்:அறிவின் கேள்வி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவிர மன்னனுக்காக மக்கள் அல்ல என்று எழுந்த கோஷம் கூட உமக்கு விபரீதமாகத் தான் தொனித்திருக்கும். டியூக் ஆங் பாகண்டி முதன்முதலில் இந்த நியாயத்தை அறிவித்தபோது ஷெயின்ட் சைமன் - அடிநக்கும் அரண்மனை வாலா அல்ல அவர்; மேலும். அக்காலத்திய அறிவுப்பிழம்புகளில் அவர் ஒருவர் - கூற்றின் தாராளத்தனத்துக்காக மகிழ்ந்து போனார். ஆனால் அதன் புதுமையில் திடுக்கிட்டு, துணிச்சலுக்காக அஞ்சிவிட்டார். நமது கூற்று விநோதமாகப்படலாம். ஆனால் அதை ஆட்சேபித்து ஒதுக்கிவிட முடியாது. நமது சிருஷ்டிகர்த்தா மகாப் பெரியவர்; நமது தர்ம நியாயங்களுக்கெல்லாம் சொல்வதானால், உரிமைக்கும் மேலாக தடித்தனத்தை பூஜிப்பதல்லாமல் வேறென்ன இது என்று கேட்கிறோம்? சரி நமது கோஷம் சரியானது என்று ஒப்புக்கொள்வதானால் இன்றைய வாழ்க்கைத் தத்துவம் நியாயமானது என்று எப்படி நிரூபிக்க முடியும்?

கடவுள் எல்லாம் வல்லவராம். அதே வேளையில் கருணைக்கடல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒன்று மற்றொன்றை வெட்டும் கூற்று, அவர் சக்தியின் பூரணன் என்றும், புனிதத்தின் பூரணனனும் அவனே எனவும் கூறப்படுகிறது. அவன் ஒருவனே இவ்விரு பண்பினனாகவும் 'இருக்க முடியாது என்பதை நாம் விளக்குவோம்.

தந்தை தன் குழந்தையிடம் நடந்துகொள்ளும் முறை கொடியதாய் தோன்றும். உண்மையில் அது கொடுமை அல்ல. அவன் பிள்ளையை அடிக்கிறான். அது மகனின் நன்மைக்காக, அவன் சர்வு வல்லமை உள்ளவனல்ல. ஆகவே, இரண்டு தீங்குகளில் எதையாவது ஒன்றை அவன்