பற்றி ஒரு சிறிதாவது அவன் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே!
உண்மையாகவே தீர்ப்பு நாள் என ஒன்று இருக்கு மானால், அதிலே மனிதன் ஆஜராக்கப்பட வேண்டியது குற்றவாளியாக அல்ல; குற்றம் சாட்டுவோனாகத் தான். வரவேண்டும். ஆசைகளைத் தூண்டி, சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் வாழ்விலே உழல வேண்டும் என்பதற்கு அவன் என்ன பாபம் செய்தான்? கடவுள் நம் எல்லோரையும் ஆனந்தம் அனுபவிப்பவர்களாகப் படைத்திருக்கலாம்; ஆனால் நம்மைத் துயரப்பட வேண்டியவர்களாக ஆக்கிவிட் டான். இதுதான் கருணையா? கடவுள் நம்மை யெல்லாம் புனிதர்களாகப் படைத்திருக்கலாம். ஆனால் எல்லோரை யும் அவன் பாபிகளாகப் படைத்துவிட்டான். இதுதான் தர்மத்தின் பூரணமோ ?
மனிதன் சிருஷ்டித்துள்ள இத்தக் கடவுள் இருக்கிறானென நான் நம்புவதானால், நான் சொல்வேன்: கடவுளே, உமது உலகிலே உயிர் வாழும்படி நீர் என்னை ஆட்டிவைக்கலாம் ஆனால் அதை வியந்து பாராட்டும்படி
நீர் என்னை மாற்றிவிட முடியாது ஆனால் உன் புகழ் பாடும்படி நீர் என்னை திருத்த முடியாது நீர் என்னை பழிப்பீரானால் அது உன்னையே தூற்றிக் கொள்வதாகும்.நான் பாபங்கள் செய்தேன் என்றால் அந்தப் பாபங்களை உண்டாக்கியதும் நீர்தானே? நீர் செய்த கடிகாரம் சரியாக ஓடவில்லையானால் அது எவர் தவறு ?உருளைகளையும் கம்பிகளையும் சபிப்பது தானா அறிவுக்குப் பொருத்தம் ?