பக்கம்:அறிவியற் சோலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறறை இழைத்தனர் என்று தெரிய வருகின்றது இத்தோல்வி குறித்து ராகோசி கூறுவதாவது, ' இ. தோல்வி குறித்து ஒன்றும் நான் கவலை கொள்ள வில்லை ; ஏனெனில் ஹங்கேரி மக்கள் எல்லோரு ஒன்றுபட்ட ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை மறைக்கவோ அல்லது மாற்றவோ முடியாது காரிருளால் பகலவன் தான் மறைவதுண்டோ நாங்கள் தொடர்ந்து நடத்தி வந்த புரட்சிகள் ஹங்கேரியை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கத் தான் என்ற எண்ணத்தை எவரும் மறுக்க இயலாது. நாடு தந்த நற்பரிசு உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்து சித்தம் சோர்வுருது உழைத்த உத்தமர்கள் இறுதியில் என்ன பயனடைவர் பழக்கம் பழக்கம் என்று சொல்லிச் சமுதாயத்தைச் சீர்கெடச் செய்து வந்தவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப் புறப் பட்ட சாக்ரடீஸ் கண்டதென்ன ? பிறர் நலத்துக் காகப் பாடுபட்ட அவர் நஞ்சூட்டப் பெற்ருர். அடிமைத் தளையினை அறுக்க அல்லும் பகலும் அயராது உழைத்த ஆபிரகாம் லிங்கன் அடைந்த தென்ன ? துப்பாக்கிக் குண்டு அவரது உடலைத் துளைத்ததன்ருே இதுபோன்றே நாட்டின் விடு தலைக்காக, உழைப்பவர்கள் உயவிற்காக, உழைத்த உத்தமர்கள் பலர் மேற்கூறிய இரு பெரியார்களைப் போன்று சாவை அணைக்காவிட்டாலும், நாடு கடத்தப் பட்டனர் ; சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதற்குச் சரித்திரம் சான்று பகருகின்றது. இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/32&oldid=739267" இலிருந்து மீள்விக்கப்பட்டது