பக்கம்:அறிவியற் சோலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை நம் நாட்டின் இக்காலக் கல்வி நோக்கம், நம்மை சமுதாயத் துக்குப் பயன்படும் வகையில் நாட்டுப்பற்று, தொண்டு மனப் பான்மை, விளையாட்டில் ஊக்கம் முதலிய நற்பண்புகளைப் பெறச் செய்து, நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏற்றவாறு வாழத்தக்க செம்மை நிலையையுடைய தலைவர்களாக்குவதேயாகும். ஆசிரியர், இந் நோக்கத்தைக் கருத்தில் இருத்தி அறிவியற் சோலை' என்னும் இந்நூலை இயற்றியுள்ளார். நமக்கு மேலும் மேலும் பல பொருள்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் ஊட்டும் முறையில் எளிய நடையில் இந்நூல் அமைந்திருக்கிறது. சப்பானைக் குறித்த கட்டுரை நம் நாட்டை உருவாக்குவதற்கு நம்முடைய எண்ணத்தைத் தூண்டும் என்று கருதுகிறேன். தொழில் வளத்திலும் வணிகத் துறையிலும் சிறந்து விளங்கும் சப்பானைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்ருல் மிகையாகாது. ஊக்கம் மிகுந்த ஆசிரியர் திருவாளர் அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் இத்தகைய நூல்கள் பலவற்றை இயற்றி நம்மை ஊக்குவார் என்று நம்புகிறேன். என் நண்பருடைய திருமகளுரும் தியாகராசர் கல்லூரி நூலகத் தலைவருமான திரு. அ. தி. முத்துசுவாமி அவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட நீடுழி வாழுமாறு வாழ்த்து கிறேன். தியாகராசர் கல்லூரி, மதுரை. அ. கி. பரந்தாமர்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/5&oldid=739286" இலிருந்து மீள்விக்கப்பட்டது