125
button-wood : பொத்தான் மரம் : பார்க்க : அத்திமரம்
butt ramming : (வார்.) திமிசு அடித்து இறுக்குதல் : (வார்.) திமிசுக் கட்டையின் பெரிய உருண்டையான முனையினால் அடித்து இறுக்குதல்
buttress flying : (க.க.) உதைகால் வளைவு : உயர் கட்டுமானங்களுக்குச் சுவர் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம்
buttess thread : (எந்.) மூட்டுத் திருகிழை : குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்கு மீறிய அதிர்ச்சியைத் தாங்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது
butt welding : (பட்.) மூட்டுப் பற்றவைப்பு : இரு துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு, இரு முனைகளும் நேரடியாகப் பொருந்தியிருக்கும்படி பற்றவைக்கும் முறை. மின்னியல் முறையில் பற்ற வைப்பதற்காகப் பொதுவாகப் பயன்படும் முறை
buzzer : (மின்.) மின் ஒலிக்கருவி : வண்டு போன்று முரலும் ஒலி எழுப்பும் மின்சார அறிவிப்புக் கருவி
buzz saw : (மர.வே.) வட்ட இயக்கம் : ஒரு வட்ட வடிமவான ரம்பம்
by pass : (கம்.) இடைகடப்பு வழி : நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்று வழி