130
யும் உடைய ஒரு சாதனம். இது விலைச் சீட்டு முதலியவற்றுக்குப் பணம் செலுத்தப்படும் நேரத்தைத் துல்லியமாக முத்திரையிடப் பயன்படுகிறது
calculus : (நோயி.) கல்லடைப்பு : சிறுநீரகம், சவ்வுப்பை போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் கல் போன்ற தடிப்பு
calculus : (கணி.) கலன கணிதம் : ஐசக் நியூட்டனும், லைப் னிட்சும் தனித்தனியே ஆராய்ந்து இந்தக் கணித முறையைக் கண்டு பிடித்தனர். இந்த முறை மூலம் கணித ஆாாய்ச்சியில் ஒரு புதிய ஆராய்ச்சித் துறையே உருவாகியது
caldron : கால்ட்ரான் : ஒரு பெரிய உலோகக் கொதிகெண்டி அல்லது கொதிகலன்
calender : மெருகேற்றும் உருளை : துணி, காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுவதற்குப் பயன்படும் உருளை
calendered : மெருகேற்றிய : மெருகேற்றி வடிவாக்கம் செய்யப்பட்ட காகிதத்தைக் குறிக்கிறது
calendering : (குழை.) மேருகேற்றுதல் : துணி, காகிதம், பிளாஸ்டிக் தகடுகள் முதலியவற்றுக்கு படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுதல்
caliber : குழல்விட்டம் : ஒரு குழலின் உள்விட்டம்
calibration : திருத்தளவுக் கணக் கீடு : அறிவியல் கருவிகளில் குறுக்களவுக் கூடுதல் குறைவுகளைத் துல்லியமாகக் கணக்கிடுதல்
calico : காலி கோதுணி : சொர சொரப்புள்ள பஞ்ச்த்துணி, கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது
california job case : (அச்சு.) கலிபோர்னியா அச்செழுத்து அறைப் பெட்டி : கையினால் அடுக்கப்படும் அச்செழுததுகளை வைப்பதற்கான ஒர் அறைப்பெட்டி
calin : கேலைன் : ஈயமும் வெள்ளீயமும் கலந்த ஒர் உலோகக் கலவை. கொள்கலன்களுக்கான உள்வரிப்பூச்சு போன்றவற்றுக்கான மெல்லிய தகடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது
caliper : (பட்.) விட்டமானி : வட்டமான பொருள்களில் அகப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவு கருவிக் கோலில் இழையும் அளவுக் காய்களையுடைய விட்டமானி இதன்மூலம் சென்டி மீட்டர் கனமுள்ள காகிதத்தின் கனத்தையும் துல்லியமாக அளவிடலாம்
caliper rule : விட்டமானி அளவு கோல் : அகப்புற விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல். இதில் அளவுகள் பகுத்துக் குறிக்கப்பட்டிருக்கும். இதன் நிலையான தலை பூச்சிய வரையீடுகளையுடைய ஒரு வரிப் பள்ளத்தின் வழியே நகர்ந்து செல்லும்
caliper Square : (எந்.) விட்டமானி அளவு கருவி : பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுகோலின் மீது இழையும் அளவு காய்களை உடைய அளவுக் கருவி