பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

குழம்பு வேதியியல் பொருளில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது

chemical engineer : வேதியல் பொறியாளர் : இவர் ஒரு வேதியியல் தொழிற்சாலைகளை வடிவமைத்து நிறுவுவதும், தொழில் துறை வேதியியலில் ஆராய்ச்சியினையும், பொதுப்பணிக்ளையும் செய்வதும் இவரது பணிகளாகும்

chemical fuel : (விண்.) வேதியியல் எரிபொருள் : உள்ளெரிதலுக்காக ஒர் ஆக்சிகரணியை நம்பியிருக்கும் ஒர் எரிபொருள். திரவ அல்லது திட ராக்கெட் எரி பொருள், தாரை எரிபொருள், உள்ளெரி எஞ்சின் எரிபொருள் இவ்வகையைச் சேர்ந்தவை

chemical metallurgy : (உலோ.) வேதியியல் உலோகவியல் : உலோகங்களை உருக்குவதிலும், சுத்தி கரிப்பதிலும் உலோகக் கலவை தயாரிப்பதிலும் ஏற்படும் வேதியியல் வினைகள் பற்றி ஆராய்தல்

chemically pure : (இயற்.) வேதியியல் செயல்முறையில் தூய்மையான : வேதியியல் செயல்முறைப் பொருள்கள் எதுவும் சிறிதும் இல்லாத முற்றிலும் தூய்மையான பொருள். ஆனால், நடைமுறையில் இது இயல்வதன்று. எனவே, பொதுவாக மிகக் குறைந்த அளவு வேதியியல் மாசுபாடுகள் இருப்பதையே வேதியியல் செயல்முறையில் தூய்மையானது என்கிறோம்

chemical pulp : (உலோ.) வேதியியல் மரக்கூழ் : மரக்கூழைக் குறிக்கும் சொல். அகன்ற இலை மரங்களின் வெட்டு மரங்களிலிருந்து உவர்க்காரச் செய்முறை மூலம் இந்தக்கூழ் தயாரிக்கப்படுகிறது

chemistry : வேதியியல் : பொருள்களின் இயைபின்னயும், அமைப்பு முறையினையும், புதிய பொருள்கள் உண்டாக்கும் பொருள்களில் ஏற்படும் மாறுதல்களையும் ஆராயும் அறிவியல்

chemosphere : (விண்.) வேதியியல் மண்டலம் : மேல் வாயு மண்டலத்தில் ஒளி வேதியியல் வினைகள் நடைபெறும் மண்டலம்

chemotheraphy : (நோயி.) வேதியியல் நோய்ச் சிகிச்சை : நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்கும் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு நோயைக் குணப் படுத்தும் முறை

chemurgy : ஆக்கப் பொருள் வேதியியல் : வேதியியல் கழிவுப்பொருள்களையும், உழவுத் தொழில் மூலப் பொருள்களையும் தொழிலுக்குப் பயன்படும் புதிய ஆக்கப்பொருள்களாக மாற்றுவதற்குரிய செயல் முறை வேதியியல் பிரிவு

chemille : மென்பட்டிழைக் கச்சை : ஆடைகளின் ஒரக் கரை புனையணியாகப் பயன்படும் மென்பட்டிழைக்கச்சை வகை. அறைகலன் அலங்காரத் துணியாக இது பயன்படுகிறது

chequer : பல வண்ணச் சதுரம் : சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் சதுரங்களின் அமைப்பு

cherry : (உலோ.) செர்ரி :(1) ஒரு வகை அமைப்பு வெட்டுக்கருவி. கருவிகள் செய்வதற்கான படிவ அச்சின் அல்லது அது போன்ற கருவியின் உள்முகத்திற்கு மெரு கூட்டுவதற்கு இது பயன்படுகிறது. (2) சிறு கொட்டையுடைய சிவந்த கனி தரும் மரவகை

chestnut : (மர.) செம்புங்கமரம் : செந்தவிட்டு நிறமான கொட்டையுடைய மரம். இது நடுத்தரமான கடினத் தன்மையுடையது. இதன் வெட்டுமரம் சொரசொரப்பாக இருக்கும். மலிவான அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது