பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
155

chestnut oak : (மர.) செம்புங்கக் கருவாலி : நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கரும்பழுப்பு நிறமுடையதாக வழு வழுப்பாக இருக்கும். நெருக்கமான கரண்களைக் கொண்டிருக்கும். வெண் கருவாலி பயன்படுத்தப் படும் அதே நோக்கங்களுக்கு இதுவும் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயனாகின்றது

chevron : (க.க.) உத்திரம்/கைம் மரம் : (1) இடம் வலம்ாக அல்லது மேலுங் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடையது. இது ரோமானிய வழிப் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது

(2) வீட்டின் இரண்டு கைம் மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாக காட்டும் அமைவு

chewed : (அச்சு.) அரிமானம் : அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது

chief chemical engineer : தலைமை வேதியியல் பொறியாளர் : வேதியியல் செயல்முறை நுட்பங்களிலும் நிருவாகத்திலும் வல்லுநராகவுள்ள முக்கியமான அலுவலாளர்

chief drafts' man : தலைமை வரைவாளர் : வரைவுப் பணியறைக்கும் நிருவாகத்திற்குமிடையில் ஒரு தொடர்பாளராக விளங்குபவர். வரைவுப் பணியறை திறம்பட இயங்குமாறு பார்த்துக் கொள்வது இவரது பொறுப்பு, இவரது துறையிலுள்ள அனைத்து ஊழியர்களும் இவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள்

chicken pox : (நோயி.) சின்னம்மை : குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவகைத் தொற்றுநோய். இதனால் உடலில் புள்ளிகள் ஏற்படும். இதனைத் தட்டம்மை, பயற்றம்மை என்றும் கூறுவர்

chief engineer : தலைமைப் பொறியாளர் : ஒரு தொழிற்சாலையில், ஒரு தலைமைப் பொறியாளரை கண்காணிப்பாளர் அல்லது பணிமேலாளர் என்று அழைப்பர். தொழிற்சாலையின் கொள்கைகள் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருவது இவரது பொறுப்பு. மற்ற பொறியாளர்களின் பணிகளைத் திறமையாக இயக்குவதற்கு இவர் போதிய திறமையும் அனுபவமும் உடையவராக இருத்தல் வேண்டும்

chief of party : குழுத்தலைவர் : களப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்குப் பொறுப்பாக உள்ள ஒரு பொதுப் பணிப்பொறியாளருக்குப் பொறுப்பானவராக இருப்பார்

chiffonier : (மர.வே.) சிங்கார நிலைப் பெட்டி : கண்ணறைகளும், இழுப்பறைகளும் உள்ள ஒர் அலங்கார்ப் பெட்டி. வண்ண வேலை அடுக்கு மேடை

chil : அச்சுருப்படிவம் : இது ஒரு உலோக அச்சுருப்படிவம். இதில் உருகிய இரும்புக் குழம்பினை ஊற்றிக் கடினமான வார்ப்புருக்கள் செய்யப்படுகின்றன

chilled casting : (எந்.) அச்சுருப் படிவ வார்ப்படம் : இரும்பு அல்லது எஃகு முகப்புடைய வார்ப்படத்தில் செய்யப்பட்ட_வார்ப்பு. இந்த வார்ப்படத்தில் மிக விரைவாகக் குளிரூட்டப்படுவதால், வார்ப் படத்தின் கடினத்தன்மை அதிகரிக்கிறது

chimera : கதம்ப உருவம் : பழம் புராணக் கதைகளுக்குரிய சிங்கத்