பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


களால் இது உண்டாகிறது. சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் இது முக்கியமாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து பல முக்கிய வேதியியல் துணைப் பொருள்களும் கிடைக்கின்றன

coal gas : நிலக்கரி வாயு : நிலக்கீலார்ந்த நிலக்கரியைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படும் வாயு. இது விளக்கு எரிப்பதற்கும் வெப்பம் உண்டாக்குவதற்கும் பயன்படுகிறது

coal sizes : நிலக்கரி வடிவளவுகள் : விற்பனை செய்யப்படும் நிலக்கீலற்ற நிலக்கரியின் வடிவளவுகள். இவை நிலக்கரி உட்செல்லக் கூடிய அல்லது மேற்செல்லக் கூடிய ஒரு துவாரத்தின் விட்டத்தின் அளவுகளில் அமைந்திருக்கும்

உட் செல்வது மேற் செல்வது
உடைந்தது 4 1/2" 3 1/4"
முட்டை வடிவம் 3 1/4" 2 5/6"
கணப்பகுப்பு 2 8/6" 1 5/8"
செஸ்ட் நட் 1 5/8" 7/8"
பட்டாணி 7/8" 1 9/9"
கோதுமை எண். 1 1 9/6" 1 9/6"

coat tar: கீல் கரி எண்ணெய் : கரு நிற நிலக்கீல். இது நிலக்கரி வாயு உற்பத்தியில் உறைவிக்கப்பட்ட நிலக்கீலார்ந்த நிலக்கரியிலிருந்து வாலை வடித்தல் மூலம் வடித்திறக்கப்பட்டது. இது கலைத் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

coat : வண்ணப்பூச்சு : வண்ணம், அரைச்சாந்து போன்ற பொருள்களை ஒரே சமயத்தில் மேற்படலமாகப் பூசுதல்

coated lens : மேற்படல ஆடிகள் : சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சூடாக்குவதன் மூலம் உண்டாகும் மிக மெல்லிய மேற்படலம். இதன் மூலம் திறம்பாடு அதிகரிக்கிறது

coated paper : மேற்படலமிட்ட காகிதம் : மிகவும் பளபளப்பாக்கப்பட்ட காகிதம். மிக உயர்ந்த ரக நுண்பதிவுப் பட வேலைப்பாடுகளுக்குத் தேவையான வழுவழுப்புடன் அல்லது மங்கலான மெருகுடன் இது தயாரிக்கப்படுகிறது

coaxial : (கணி.) பொது ஊடச்சுடைய : நீள் வட்டம் அல்லது நிமிர் மாலை வட்டம் போன்ற ஒருங்கிணைகிற அச்சுக்களையுடைய எதுவும்

coaxial cable : பொது இருசுத் தந்திவடம் : தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளையும் ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்தி வட அமைவு

cobalt : (கணி.) கோபால்ட் : இது வெண்ணிறமான உலோகம். இது இரும்பு வகையைச் சேர்ந்தது. கடினமானது. இது அணு எண் 27 உடைய ஒரு தனிமம். உலோக வகையிலிருந்து நீல வண்ணப் பொருள் தயாரிக்க மிகவும் பயன்படுகிறது

cobalt blue : கோபால்ட் நீலம் : வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப் பொருள்

cobaltcrom steel : கோபால்ட் குரோம் எஃகு : இது ஒர் எஃகு உலோகக் கலவை. இதில் 1.5% கார்பனும் 12.5% குரோமியமும் 3.5% கோபால்ட்டும் கலந்திருக்கும். இது வெட்டுக் கருவிகள் தயாரிக்க ஏற்றது

cocaine : (மருந்.) கோக்கைன் : இதன் அமெரிக்காவைச் சேர்ந்த கோக்கரச் செடி வகையிலிருந்து