பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
189

புரிப்பெட்டிகள் செய்வதற்கான ஒா இழைப்புளி, இழைப்புளியின் செங்கோணப் பக்கங்கள் வெட்டு விளிம்புகளில் படிந்திருக்கும்போது இழைப்புளியின் நுனி வட்டத்தின் சுற்ற்ளவின் மீது வெட்டிச் செல்லும்

cored carbon : (மின்.) உள்ளீடகற்றிய கார்பன் : நீள்வாக்கில் மென்மையான உட்புரி கொண்ட ஒரு கார்பன். இது மாறு மின்னோட்டத்தில் மின்சுடரின் திறமையான செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது

cored hole : (வார்) உட்புரித் துவாரம் : வார்ப்பட முறையில் நேரடியாக அமைக்கப்பட்ட உட்புரித் துவாரம். வார்ப்படத்தில் துளையிடுதல் அல்லது துரப்பணமிடுதல் இல்லாமல் அமைக்கப்படும் துவாரம் எதனையும் இது குறிக்கிறது

core disks: (மின்.) உட்புரித் தகடுகள் : மென் தகட்டு மின்னக உட்புரிகள் அமைப்பதற்கெனப் பயன்படுத்தப்படும் இரும்புத் தகட்டினாலான மெல்லிய வட்ட வடிவத் தகடுகள்

core drier: (வார்.) உட்புரி உணக்கும் பொறி : சுடுகின்றபோது உட்புரியின் வடிவத்த்தை அப்படியே இறுத்தி வைத்துக் கொள்ளும் பொறியமைவு

core drili : (உலோ.வே.) உட்புரித் துரப்பணம் : இது உட்குழியுள்ள ஒரு துரப்ப்ண்ம். இது உலோகத்தைச் சிம்பு சிம்பாக அல்லாமல் துண்டு துண்டாக வெட்டக் கூடியது. ஒரு வார்ப்படத்திலிருந்து சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கு இது பயன்படுகிறது

core iron : (மின்) தேனிரும்புச் சலாகை : மின்காந்த விசைச் சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச் சலாகை

core loss : (மின்.) உட்புரி இழப்பு : ஒரு மின்னகத்தின் அல்லது மின் மாற்றியில் சுழல் மின்னோட்டங்கள், காந்தத்தியக்கங்கள் போன்ற விளைவுகள் காரணமாக உட்புரியில் ஏற்படும் மின்விசை இழப்பு

core machine : (வார்.) உட்புரிப் பொறி : ஒரு பெய் குடுவையினைக் கொண்டுள்ள கையினால் அல்லது விசையினால் இயக்கக்கூடிய ஓர் எந்திரம். இது வட்டமான மற்றும் சதுரமான அடிமுனை உட்புரிகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது

core oils : (வார்.) உட்புரி எண்ணெய்கள் : வார்ப்பட வேலைப் பாடுகளில் உட்புரிகள் செய்வதற் குப் பயன்படும் எண்ணெய்கள், ஆளிவிதை எண்ணெய் அல்லது மலிவான பிற எண்ணெய்களுடன் கலந்த ஆளிவிதை எண்ணெய் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது

core oven : (வார்.) உட்புரி அடுப்பு : உட்புரிகளைச் சூடாக்கி வார்ப்பதற்குப் பயன்படும் அடுப்பு

core pin : (குழை.) உட்புரி முளை : வார்ப்படம் செய்த பொருளில் ஒரு துவாரத்தை அல்லது துளையை உண்டாக்கப் பயன்படும் முளை

core prim : (வார்.) உட்புரி வடிவம் : வார்ப்படப் பொருளை ஊற்றுகின்றபோது, மணற்கட்டி வார்ப்புச்சுருளில் ஒரு வடிவத்தைப் பதித்து அதன் உட்புரியை உரிய இடத்தில் நிலையாகப் பிடித்து வைத்துக் கொள்கிற ஒரு வடிவப் புடைப்பு

core sand : (வார்.) உட்புரி மணற்கட்டி வார்ப்பு : வார்ப்புக்குப் பயன் படுத்தப்படும் மணற்கட்டி வார்ப்புரு