193
கருவி :
(1) திருகாணித் தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்தல்
(2) அவ்வாறு பள்ளம் செய்வதற்கான கருவி
counter vveight : சரி எதிரெடை: சமநிலை ஏற்படுத்துவதற்காக இணைக்கப்படும் ஓர் விளிம்புடன்,பொருத்தப்படும் ஓர் எடைஇதற்கு எடுத்துக்காட்டு
count of cloth : நூலிழைத் தரக் குறிப்பெண் : ஒரு சதுர அங்குலத் துணியில் உள்ள பாவு நூல், நிரப்பு இழை ஆகியவற்றின் எண்ணிக்கை
country beam : (தானி,எந்.) நாட்டுப்புற ஒளிக்கதிர் : உந்து வண்டிகள் நெடுஞ்சாலை களில் செல்லும் போது, ஓட்டுநருக்கு நோாக ஒளிக்கதிர் பாயுமாறு வடிவமைக்கப்பட்ட மேல் நிலை ஒளிக் கதிர். இது நாட்டுப்புறப் பகுதிகளில் செல்லும் போது, எதிரில் ஊர்திகள் வராத போது பயன்படுத்தப்படுகிறது
coupe : (தானி) தனியறைப் பெட்டி வண்டி: இரு பயணிகளுக்கு மட்டும் இடவசதியுள்ள ஒரு தனியறைப் பெட்டி வண்டி. இதன் பின்புறத்தில் சாமான்கள் அறை யொன்று இருக்கும்
couple . (எந்) ஈரெதிர் விசை : ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் சமமான இரண்டு ஆற்றல்களின் இணைவு
coupled inductance : (மின்) இணைவு மின்தூண்டல் : ஒரு மின் சுற்று வழியில்,ஓர் இரண்டாம் மின்சுற்று வழியில் மின்னோட்ட மாறுதல்கள் வாயிலாகத் தூண்டப்பட்ட மின்விசை அழுத்த அளவு
coupler : (மின்.) இணைப்பான் ஒன்றுக்கொன்று இணைந்து இயக்கும் இசைப்பொறியமைப்பு
coupling : (கம்.) இணைப்புக் கொக்கி: இரு குழாய்த் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படும் இணைப்புக் கொக்கி, இதில் உட்புறத்தில் புரியிழைகள் அமைக்கப்பட்டிருக்கும்
course: அடுக்கு வரிசை : அடுக்கு வரிசையாக அல்லது தளவரிசையாக அமைத்தல். ஒரு சுவரில் அடுக்கப்படும் ஒரு செங்கல் வரிசை ஓர் அடுக்கு வரிசை எனப்படும்
course light: (வானூ) ஓடுபாதை விளக்கு : விமான நிலையத்தின் ஓடுபாதை நன்கு புலனாகுமாறு அமைக்கப்படுள்ள ஒளி விளக்கு
court : (க.க.) சதுக்கக் கூடம்: நாற்புறமும் கட்டிடங்கள் சூழ்ந்த அல்லது ஓரிரு பக்கங்களில் மட்டும் கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம்
court cupboard : காட்சிக் கூட அடுக்குப் பலகை : இது ஒரு குட்டையான அடுக்குப் பலகை. முதலில் இது ஒரு பக்கமே பையாக அமைக்கப்பட்டது. பின்னர் தனி அடுக்காக அமைக்கப்பட்டது
cove : வளைவிடம் : ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும்.
cove ceiling : (க.க) வளைவு விதானம் : சுவர்களிலிருந்து எழுந்து வளைவாக உளள ஒரு விதானம்
cove mouding : (க.க) வளைவு மேல் தளம் : உட்குழிவான மேல் தளம்
cover mould: (குழை) பொதி வார்ப்படம் : ஓர் உட்செலுத்து வார்ப்படத்தில் நிலையிருப்பாக உள்ள ஒரு பாதி