பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194

cover papers ; (அச்சு) அட்டைத் தாள்கள் : துண்டு வெளியீடுகளுக்கு அட்டைகளாகப் பயன்படுத்துவதற்கான கனத்த தாள்கள் அஞ்சலில் அனுப்புவதற்குத் தேவைப்படும் வலுவான தாளாக பயன்படுத்தப்படுகிறது

cover plate : (பொறி) கவசத் தகடு : ஒரு தூணின் அல்லது தூலத்தின் பக்கப் பகுதியில், வளைவினைத் தாங்குவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ள ஒரு தகடு

cowl : (தானி.எந்.) கவிகை மூடி : உந்துவண்டியில் பிடருக் கவிகைக்கும், கருவியறைக்குமிடையில் கவிகை போல் அமைந்திருக்கும் பகுதி

cowling : (வானூ.) விமான எங்திரக் கவிகை மூடி : விமான எந்திரத்தின் மேல்மூடி. இதனை அகற்றவும் மீண்டும் நீட்டிக் கொள்ளவும் செய்யும் வகையில் இது அமைந்திருக்கும்

cracking. (வேதி.) பிளப்பு முறை: மண்ணெண்ணெய். எரியெண்ணெய் போன்றவற்றில் வெப்ப மூட்டி, அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எடுக்கும் அளவினை அதிகரிப்பதற்குரிய ஒரு செய்முறை. இதில் பெட்ரோலியம் தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது

crackle : பீங்கான் அழகு வேலைபாடு: அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலத்திலுள்ள நுட்ப வேலைப்பாடுகள்

craft : கைவினை : கைவேலைப் பாடுகளை நுட்பமாகச் செய்திடும் தேர்ச்சித் திறன். கைத் திறனுள்ள தொழில்; செய்தொழில்

crafts man : கைவினைஞர் :தேர்ச்சித் திறன் வாய்ந்த ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்

crampiron : (வார்.) இரும்புப் பற்றிணைப்பு : பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.இது வார்ப்படத் தொழிலில் பயன்படுகிறது

crane : பாரந்தூக்கிப் பொறி: பற்சக்கரங்கள், கம்பி வடங்கள் பீப்பாய் வடங்கள் முதலியவற்றின் மூலமாக பெரும் பாரங்களைத் தூக்குவதற்குப் பயன்படுகிற, கையினால், மின்விசையினால் இயக்கப்படுகிற ஒரு பொறியமைவு

crane ladle: பாரந்துக்கி அகப்பை: உருக்கிய உலோகத்தை எடுத்துச் செல்வதற்குரிய பெரிய அளவு அகப்பை. இது மிகப் பெரியதாக இருப்பதால் இதனை ஒரு பாரந்துக்கியினால் மட்டுமே தூக்க முடியும்

crank : (எந்.) திருகு விட்டம் : ஒரு சுழல் தண்டின் அச்சினைச் சுற்றி சுழல்கிற ஒரு நெம்புகோல்

crankcase : (தானி.) உராய் பொருட்கலம் : ஓர் உந்துவண்டியின் அடிப்பகுதி. இது உராய்வு எண்ணெய் வழங்குவதற்கான ஒரு சேமிப்புக் கலமாகச் செயற்படுகிறது.

crank case ventilator : (தானி) உராய் பொருட்கலப் பலகணி : உராய் பொருட் கலத்தில் உண்டாகும் ஆவிகளை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான சாதனம். இவ்வாறு வெளியேற்றாவிட்டால், நீராவியாலும், பெட்ரோலியம் ஆவியாலும் எண்ணெய் நீர்த்துப் போய்விடும்

crank shaft : (எந்.பொறி.) திருகு வட்ட சுழல்தண்டு : ஓர் எஞ்சினின் பிரதான சுழல் தண்டு. இதனுடன் இணைப்புச் சலாகைகள் பொருத்தப்படிருக்கும். இது உந்து தண்டுகளின் விரைசூழல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது