பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202

சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளில் பயன்படுத்துகிறார்கள். குதிரை வால்முடி இந்த வேலைக்கு மிகவும் ஏற்றது

curling die : (எந்) சுருள் வார்ப்புரு : உலோகத் தகட்டிலிருந்து தயாரிக்கப்படும் கிண்ணத்தின் மேற்பகுதியில் சுருள் முனை அமைப்பதற்குப் பயன்படும் வார்ப்புரு

current : (மின்.) மின்னோட்டம் : வெவ்வேறு ஆற்றல் திறனுள்ள இரு முனைகளில் மேல் முனையிலிருந்து கீழ் முனைக்கு ஒரு கடத்தியின் வழியாகப் பாயும் மின்னாற்றல்

current density : (மின்) மின்னோட்ட அடர்த்தி: மின்கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதியின் ஓர் அலகுக்கான ஆம்பியர் அளவு

current limit thermostat; மின்னோட்ட வரம்பு வெப்ப நிலைப்பி: மிகையாக மின்னோட்டம் பாய்வதன் காரணமாகச் சேதம் ஏற்படுவதை தடுப்பதற்கு, ஓர் உருக்கிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மின் விசைச் சாதனம். இது வெப்பத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது

current node : (மின்) மின்னோட்ட மையமுனை: நிலையான அலைகளையுடைய மின்செலுத்துக் கம்பியில் பூஜ்ய மின்னோட்டம் உண்டாகும் புள்ளி

current regulator : (தானி.எந்) மின்னோட்டச் சீர்தூக்கி: இது காந்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் ஓர் உணர்த்தி. இதன்மூலம் மின்னாக்கியிலிருந்து மாறாத மின்னோட்ட அளவினைப் பெறுவதற்கு மின்னாக்கியின் புலமின் சுற்றுவழி உண்டாக்கப்பட்டு முறிக்கப்படுகிறது

current strength ; மின்னோட்ட வலிமை : பாயும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர்களில் அளவிடப்படுகிறது

current transformer : (மின்) மின்னோட்ட மாற்றி : பார்க்க : மாற்றி

current - voltage regulator : (மின்.) மின்னோட்ட அழுத்த ஒழுங்கியக்கி: ஒரு மின்னாக்கியின் களச்சுருணையின் தடையை ஒழுங்குபடுத்துகிற, அதிர்வு வகையான உண்ர்த்தி. இது மாறுபட்ட மின்னோட்ட அளவுகளில் ஒரு சீரான மின்னழுத்த வெளிப்பாட்டை உண்டாக்குகிறது

currying: தோல் மெருகிடல்: பதனிட்ட தோலுக்குப் பயன்படுத்துவதற்கேற்ப மெருகூட்டுதல்

curtain wall: (க.க) இட நிரப்பும் சுவர்: கட்டிடத்திலிருந்து கட்டுமான எஃகு அல்லது கான்கிரீட்டு மூலம் ஆதாரம் பெறும் சுவரைச் சார்ந்திராத கீழுள்ள ஒரு மெல்லிய சுவர்

curve: வளைகோடு: தொடர்ந்து திசைமாற்றிச் செல்லும் ஒரு கோடு

curved plate: வளைவு அச்சுத் தகடு: ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் நீள் உருளையில் பொருத்தும் வகையில் அமைந்து முதுகு வளைந்த அச்சுத் தகடு

curvilinear: வரைகோடு வரம்புடைய : வளைகோடுகளை வரம்புகளாகக் கொண்ட

cushioned frieze: நீண்டுக் கம்பளித் துணி: மறுமலர்ச்சிக்கால மேற்குவிந்த திண்டுக் கம்பளித் துணி

cushioning: திண்டுறையிணைத்தல்: அதிகமான அழுத்தத்தை அல்லது தாக்கத்தைத் தாங்கக் கூடிய வகையில் விற்கூருள் திண்டு