பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
211

decalcomania : ஒளிப்படமாற்று : கண்ணாடி, பளிங்கு, மரம், போன்ற ஏதேனும் வழிவ்ழப்பான பரப்புக்கு ஒளிப்படங்களை மாற்றுவதற்கான ஒரு செய்முறை.

decalin : டிகாலின் : இது ஒரு வகை கற்பூரத் தைலப் பொருள். கொழுப்புப் பிசின்கள், எண்ணெய்கள் ஆகியவற்றைக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. வேதியியலில் இது டெக்காஹைடி ரோன்பாப் தாலீன் என்று அழைக்கப்படும்.

decalescence points : (உலோ.) வெப்பத் தாழ்வுநிலை : எஃகின் கட்டமைப்பில் ஒரு மாறுதலை உண்டாக்குகின்ற தாழ்ந்த வெப்ப நிலை.

decantation : (வேதி.) வடித்திறுத்தல் : நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக உள்ளவற்றை நீக்கி, தெளிய வைத்த திரவத்தை ஒரு கலத்தினின்றும் மற்றொரு கலத்தில் வடித்திறுத்தல்.

decarburization : கரியமகற்றுதல் : உலோகங்களுடன் இணைத்துள்ள கார்பனை அகற்றுதல். தகடாக்கக் கூடிய இரும்பு தயாரிக்கும் செய் முறையில் இது பயன்படுத்தப்படுகிறது.

decastyle : (க.க.) மூடு முன்றில் : பத்துத் தூண்களைக் கொண்ட ஒரு புகுமுக மூடு முன்றில்.

decay : (மர.வே.) பதனழிவு : மரத்தைப் பதனழியச் செய்யக்கூடிய காளானின் செயலினால் மரத்தின் சாரம் சிதைந்து போதல். இதனை 'மட்குதல் மற்றும் அழுகுதல்’ என்றும் கூறுவர்.

decay : (மின்.) மின் பதனழிவு : மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றின் மதிப்பளவுகள் படிப்படியாகக் குறைவதைக் குறிக்கும் சொல்.

decay time : (மின்.) மின்பதனழிவு நேரம் : ஒரு மின் கொண்மியானது, தனது மூல மின்னேற்றத்தில் ஒரு குறிப்பிட்ட வீத அளவை வெளியேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.

deceleration : (விண்.) வேகத்தணிப்பு : வேகம் குறைந்து கொண்டு வருதல்.இது வேக முடுக்கத்திற்கு எதிர்மாறானது.

decelerometers : (தானி.) வேகத்தணிப்பு மானி : ஒடும் காரின் வேகத் தணிப்பு வீதத்தைப் பதிவு செய்வதற்கும், வேகத்தடைகளின் நிறுத்தும் திறனைக் குறித்துக் காட்டுவதற்குமான ஒரு சாதனம்.

decibel : ஒலியலகு : (டெசிபெல்) ஒலியின் முனைப்புத் திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பாரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஒலி அல்லது ஓசை உண்டானதும் அது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அந்த ஆற்றல் டெசிபெல் அளவுகளில் அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் எஞ்சின் உண்டாக்கும் ஓசை 120 டெசிபல் அளவுடையது.

deciduous : இலையுதிர்க்கக் கூடிய : ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்க்கக்கூடிய மரங்கள் தொடர்பானவை.

decimal : தசம / பதின்மானம் : பின்னப்பகுதிகளைப் பத்தின் பகுதி, நூறின் பகுதி முதலிய புத்தடுக்கு வரிசை முறையில் குறிப்பிடும் முறை.

decimal code: (கனி.) தசமக் குறியீடு : எண்மான முறையில் பதின்கூற்று அடுக்குக் குறியீடு.

decimal equivalent : தசமக் சம மதிப்பு : தசம மதிப்பில் குறிப்பிடப்படும் பின்னத்தின் மதிப்பு.