பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
213

சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய், மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய் (ஸ்கர்வி), குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்), தவிட்டான் (பெரிபெரி) போன்றவை இவ்வகை நோய்கள்.

definition : தெளிவுத் திறன் : தொலைக்காட்சிப் படம் தெளிவாகத் தெரியும் அளவு.

deflection : கோட்டம் : (1) அழுத்தும் பாரம் காரணமாக ஒரு தூலம் அல்லது கட்டமைப்பு கோட்டமடைதல். (2) தொலைக்காட்சியில் நிலை மின்னியல் அல்லது காந்தப் புலன்களின் வாயிலாகப் பட அல்லது ஒளிப்படக் குழாயின் எலெக்ட்ரான் கற்றை கோட்டமுறுதல்.

deflection : (மின்.) கோட்டம் : ஒரு மானியில் முள் நேர்வழியிலிருந்து விலகிச் செல்லுதல். ஒர் எலெக்ட்ரான் கற்றை நகர்ந்து அல்லது வளைந்து செல்லுதல்.

deflection factor : (மின்.) கோட்டக்காரணி : ஒர் எதிர்முனைக் கதிர்க் குழலிலுள்ள கோட்டத் தகடுகள், ஒரு குறிப்பிட்ட முடுக்க மின்னழுத்தத்தில் திரையில் ஒர் அங்குலம் மின்கதிர்க் கோட்டத்தை உண்டாக்குகிற நேர் மின்னோட்ட மின்னழுத்தம்.

deflection sensitivity : (மின்.) கோட்டமின் தூண்டு திறன் : ஒர் எதிர் முனைக் கதிர்க் குழலில், கோட்டத்தகடுகளில் செலுத்தப்படும் ஒரு வால்ட் மின்னழுத்தத்திற்கு எலெக்ட்ரான் கதிர்க்கிற்றையில் ஏற்படும் கோட்டத்தின் அளவு.

deformation : உருத்திரிபு : ஒரு பாரம் அழுத்தும்போது ஒரு கட்டமைப்பின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.

deformed bars : (பொறி). ) உருத்திரிபுச் சலாகை : சலாகைகளுக்கும் கான் கிரீட்டுக்குமிடையில் மேலும் வலுவான பிணைப்பு உண்டாக்குவதற்காக ஒழுங்கற்ற வடிவுகளில் செய்யப்படும் வலுவூட்டும் சலாகைகள்.

defrosting cycle : (குளி.பத.) உறைவுத் தடுப்புச் சுழற்சி : குளிர்பதனச் சாதனத்தில், அது வேலை செய்யாதிருக்கும்போது உறையாமலிருப் பதற்கான செய்ல் முறை.

degeneration : (உயி.) இனச்சிதைவு : உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உருமலர்ச்சிக்கு எதிர் மாறானது.

degradation : (குழை.) தரங்குறைத்தல் : சிக்கலான பொருளைச் சிதைத்து எளிய பொருளாக மாற்றுதல். எடுத்துக்காட்டாக, பிளாஸ்டிக் கொதி நிலையை அடையும்போது அதன் நீண்ட மூலக் கூற்றுச் சங்கிலிகள் சிதை வுற்று சங்கிலித் தொடராக இல்லாத பல எளிய மூலக்கூறுகளாக மாறுகிறது.

degras : கம்பளப்பசை : கம்பளத்தைத் தேய்ப்பதால் கிடைக்கும் பசையுள்ள எண்ணெய்ப் பொருள். இது உராய் பொருள்களின் குழைமத் திட்ப ஆற்றலை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

degree : பாகை : ஒரு வட்டச் சுற்றில் 360 இல் ஒரு பங்கு.

dehumidifying : ஈரநப்பு நீக்குதல் : காற்றிலுள்ள ஈரப்பதனளவைக் குறைத்தல். சில தொழிற்சாலைகளில் சில உற்பத்திச் செய்முறைகளில் ஈரப்பதனற்ற காற்று தேவைப்படும்.

dehydrator : (தானி.) ஈரமகற்று சாதனம் : காற்றிலிருந்து ஈரத்தை அகற்றும் ஒரு சாதனம் அல்லது உறை குளிரூட்டி.