பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

double acting hinge: (தச்சு.) இருதிசைக்கீல் : இரு திசைகளில் இயங்குவதற்கான கீல். ஊசலாட்டக் கதவுக்ளில் இது பயன்படுத்தப்படுகிறது

double action press : (எந்.) இருதிசை இயக்க அச்சு ஏந்திரம்: இவ்வொரு சுழற்சியின் போதும் இருவகைச் செயற்பாடுகளைச செய்யக்கூடிய வகையில் அமைந்த அச்சு எந்திரம்

double belting :இரட்டை வார்ப் பட்டை : தோலின் மிகுதியான கனத்துடன் அல்லது இருமடங்கு கனத்துடன் அமைந்த வார்ப் பட்டை

double bond: இரட்டைப் பிணைப்பு: எத்திலீன் H2C=CH2 கரிம வேதியியலில் ஒரே தனிமத்தின் இரு அணுக்களிடையிலான இரட்டைப் பிணைப்பில், ஒரு பிணைப்பு மற்றதைவிட அதிக வலுவுடையதாக இருக்கும்

double break switch : (மின்.) இரட்டை முறிப்பு விசை: ஒரே சமயத்தில் இரு கம்பிகளில் மின் சுற்றிணை உண்டாக்கவும் முறிக்கவும் வல்ல ஒரு விசை

double contact lamp : (மின்.) இரட்டைத் தொடர்பு விளக்கு : இரு அடிச்சேர் முனைகள உடைய ஒரு விளக்கு இதனைக் குதை குழியில் செருகியதும் மின்தொடர்பு ஏற்படும்

double cut : (பட்.) இரட்டை வெட்டு அரம் : ஒன்றுக்கொன்று 45-60° கோணத்தில் குறுக்காக வெட்டுகிற இரு பல் வரிசைகளைக் கொண்ட அரம்

double demy : இரட்டைவரை படக் காகிதம்:50x16செ.மீ. அளவுடைய வரைபடத்திற்கான காகிதம்

double end bolt : (எந்.) இருமுனை மரையாணி: இரு முனைகளிலும் சுரைகளுக்கான் வரிப்பள்ளம் உடைய திடமான தலையில்லாத மரையாணி. இதனைத் தண்டு மரையாணி என்றும் கூறுவர்

double filament lamp : (மின்.) ஈரிழை விளக்கு : இரண்டு இழைகள் உள்ள விளக்கு. ஒரு சமயத்தில் ஒரே இழைமட்டுமே எரியும். இந்த் இழைகள் ஒரே அளவுத் தடைகளை உடையவனாக இருக்கலாம்

double geared: (எந்.) இரட்டைப் பல்லிணையுள்ள : சாதாரணமாகப் பின்புறப் பல்லிணையுள்ள ஒரு கடைசல் எந்திரத்தின் அல்லது துரப்பன எந்திரத்தின் பல்லிணை அமைப்பு

douple hung window : ( க.க.) இரட்டைப் பல்கணி: மேலும் கீழும் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகையுள்ள ஒரு பலகணி

double ionization : (மின்.) இரட்டை அயனியாக்கம் : வாயு நிரப்பிய இருமுனையத்தில் ஒவ்வொரு வாய் மூலக்கூற்றிலிருந்தும் இரண்டு எலெக்ட்ரான்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலை

double pitch skylight: இரு கவர் மோட்டுப் பலகணி: இரு திசைகளில் சாய்வாக உள்ள ஒரு மேல்தளச் சாளரம்

double point push button : (மின்.) இரட்டை முனை அழுத்து பொத்தான் : ஒரே இயக்கத்தில் இரு தனித்தனி மின்சுற்றுகளைக் கட்டுப்படுத்த வல்ல அழுத்து பொத்தான். இதில் ஒரு கொண்டையும் இரு அடித்தொடு நிலைகளும் இருக்கும்

double pole : (மின்.) இரட்டை முளை : இரட்டை முனை விசை