பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
257

engage : (எந்.) பிணைப்பு : எந்திர உறுப்புகளை, இயக்கத்தை அல்லது விசையை அனுப்பீடு செய்வதற்காக ஒன்றாக இணைத்தல் அல்லது தொடர்புபடுத்துதல். அதாவது, பல்லிணை மாற்று நெம்புகோல் உந்து வண்டியின் வேகமாற்றப் பல்லிணைகளை பிணைக்கவோ, விடுக்கவோ செய்கின்றன

engine : (இயற்.) எந்திரம்/பொறி : பல்வேறு உறுப்புகளுள்ள எந்திர ஆமைப்பு. நீராவி, எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றினால் இயக்கக்கூடிய பலவகை எந்திரங்கள் உள்ளன

engine altimeter : (வானூ.) எந்திர உயரமானி : அளவுக்கு மீறி அழுத்தம் நிரம்பிய எந்திர அறையில் ஏற்படும் அழுத்தத்திற்கு நேரிணையான உயரத்தைக் குறித்துக் காட்டும் உயரமானி

engine control : (வானூ.) எந்திரக் கட்டுப்பாடு : எந்திரத்தின் விசை வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்தப் பயன்படும் சாதனம். காற்றுக் கட்டுப்பாடு அல்லது எந்திரக் கட்டுப்பாடு மூலம் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்

engine cowling : (வானூ.) எந்திர மூடி : விமானத்தின் எந்திர அமைப்பில் குளிர்காற்றுப் பாய்வதை நெறிப்படுத்தி முறைப்படுத்துவதற்காக அந்த எந்திரத்தைச் சுற்றி வைக்கப்படும் ஒரு மூடி

engine_displacement : (வானூ.) எந்திர இடப்பெயர்ச்சி : ஒவ்வொரு உந்து தண்டின் ஒரு முழு உகைப்பின்போது நீள் உருளைகள் அனைத்தின் உந்து தண்டுகளினாலும் இடம் பெயரச் செய்யப்படும் மொத்தக் கன அளவு

engineer : பொறியாளர் : மின்னியல், சுரங்கவியல், எந்திரவியல்,கட்டிடவியல் முதலிய துறைகளில் வடிவமைப்பு, கட்டுமானம், மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்

engineering : பொறியியல் : தொழில் துறையின் பல்வேறு துறைகளில் திறமையாகத் திட்டமிட்டு கட்டுமானம் செய்யும் கலையும் அறிவியலும்

engineer's chain : (எல்.) பொறியாளர் சங்கிலி : இதில் ஒவ்வொன்றும் 30செ.மீ. நீளமுள்ள 100கண்ணிகள் இருக்கும். நில அளவையில் முன்னர் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட குன்டர் சங்கிலி 20மீ. நீளமுடையது. இதில் ஒவ்வொன்றும் 18-234செ.மீ.நீள00 கண்ணிகள் இருக்கும்

engine lathe : (எந்.) எந்திரக் கடைசல் பொறி : ஒரு குறுக்குச் செருக்குழைவும், கூட்டு ஆதாரமும், முன்னிட்டுத் திருகு, விசையூட்டம்_உடைய ஒரு கடைசல் எந்திரம். இதில் மாற்றப் பல்லிணைகளும் அமைந்திருக்கும்

engine weight per horse power : ஒரு குதிரை ஆற்றலுக்கு எந்திர எடை : ஓர் எந்திரத்தின் உலர் எடையை அதன் குதிரை ஆற்றலினால் வகுத்துப் பெறும் ஈவு

engraving : (அச்சு.) செதுக்கு வேலைப்பாடு : (1) ஒரு தகட்டில் உட்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல். (2) செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட வடிவமைப்பு. (3) செதுக்கு வேலைப்பாடு செய்த ஒரு தகட்டிலிருந்து அச்சிடப்பட்ட L] L— LD «

enrichment : நுண் நய ஒப்பனை : சாதாரண வேலைப்பாட்டில் நுண் நய ஒப்பனை சேர்த்து அழகுடையதாக்குதல்