பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
263

அமைப்புகளில் விரிவாக்க மூட்டு கள் இருவகைப்படும்: (1) நடுவு குழல் வகை. குறைந்த அழுத்தத்தில் துருத்தி வகை சிறந்தது

expansion reamer : (எந்.) விரிவாக்கத் துளைச்சீர்மி: வடிவளவுக்கேற்ப அளவு நேரமைவுக்கு அனுமதிக்கும் ஒரு துளைச் சீர்மி. இத்தகைய நேரமைவு, திருகி மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆப்பு வினை வாயிலாக நடைபெறும்

'experiment : பரிசோதனை : அறிந்து கொண்ட சூழ்நிலைகளில் முடிவுகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் சோதனை அல்லது செய்முறை

experiment : (வானூ.) பரிசோதனை (அல்லது சோதனை) அறை :விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி

explosive : வெடி பொருள் : ஒரு விசையினால் உரக்க வெடிக்க கூடிய ஒரு பொருள் exponent : (தானி.) விசைக் குறி எண் : ஒர் எண்ணில் எத்தனை காரணிகள் உள்ளன என்பதை குறிக்க ஒரு கணித அளவில் வலது தலைப்பகுதியில் இடப்படும் சிறிய இலக்கம் அல்லது குறியீடு, எடுத்துக்காட்டாக: a4 என்பது a, a, a, a என்னும் நான்கு காரணிகளைக் கொண்டது exposure (ஒளி) ஒளிபடர் நேரம்: ஒளிப்பட சுருளில் ஒளிபடரும் மொத்த நேரத்தின் அளவு,இது ஒளித்திரையின் ஊடுருவும் திறன், கால நீட்சி, வடிவளவு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது

exposure meter : (ஒளி.) ஒளி படர் நேரமானி: ஒளிப்படச் சுருளில் சரியான அளவு ஒளிபடர் நேரத்தைக் காட்டுகின்ற ஒரு சாதனம்

extended type : (அச்சு.) நீட்சி அச்செழுத்துரு : கூடுதலான அகலமுடைய அச்செழுத்துரு.

extension bit : (மின்.) நீட்சி வெட்டிரும்பு: சற்று நீண்ட தண்டுடைய ஒரு வெட்டிரும்பு. வழக்க மான வெட்டிரும்பினைப் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்தல்லாம்.

extension cord : (மின்.) நீட்சிவடம் : தேவையான இடத்திற்கு மிக அருகில் விளக்கினை அல்லது மின்விசையினைக் கொண்டு வருவதற்கு ஒரு செருகியை அல்லது குதை குழியை உடைய ஒரு கம்பி அல்லது விளக்கு வடம்

extension tap : (எந்.) : நீட்சிகுழாய்: எட்டுவதற்குக் கடினமான இடங்களில் குழாய் அமைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் சற்று நீண்ட தண்டுடைய ஒரு குழாய்.

extensometer : நீட்சிமானி : (1) உடலின் விரிவாக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு நுட்பக் கருவி (2) உலோகங்களைச் சோதனை செய்வதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

exterior : (க.க.) புறத்தோற்றம் : ஒரு கட்டிடத்தின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்புறத் தோற்றம்; புறச்சுவர்

exterier finish:(வண்,)புறஅலங்காரம்:புறத்தோற்றத்திற்குப் பொருத்தமான அலங்கார வேலைப்பாடு

external aileron (வானு.) புற ஓர மடக்கு:ஒரு விமானத்தின் சிறகுப் பரப்புக்ளுக்குபம் புறத்தே, ஆனால் பக்கவாட்டில் திருப்பு