பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
307

யிலும் மூன்று நீளவாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருக்கும், இதைத் தொடர்ந்து ஒரு முகப்புச் செங்கல் அமைந்திருக்கும். சில சமயம் இந்தப் பிணைப்பு,முகப்புச் செங்கற்களிடையே 2-5 நீள வாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருப்பதுமுண்டு

garderobe : (மர.வே.) ஆடை அலமாரி: துணிமணி நிலையடுக்கு

gargoyle: (க.க.) நீர்த் தாரை தூம்பு : விலங்கு மனித வடிவுகளுடன் கூடிய பழைய சிற்பப் பாணியில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு

garnet : செம்மணிக்கல்: பளிங்கு போன்று ஒளிரும் செந்நிற மணிக்கல். இது உராய்வுப் பொருளாகவும் கைக்கடிகாரங்களில் தாங்கிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது

garnet paper : மணிக் காகிதம் : நுண்மணிகள் பூசிய காகிதம். இது பட்டைச்சீலைபோல் பயன்படுகிறது

garnierite : (உலோ) கார்னியரைட்டு : நிக்கல் உலோகத்தின் முக்கியத் தாதுப்பொருள். இதில் 5% நிக்கல் அடங்கியிருக்கும்

gas brazing : வாயுப் பற்றவைப்பு: வாயு எரிவதால் உண்டாகும் வெப்பத்தின் மூலம் பற்றவைக்கும் ஒரு முறை

gas engine : வாயு எஞ்சின்: வாயுவும் காற்றும் கலந்த எரிபொருள் கலவையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளெரி எஞ்சின்

gaseous fuel, or “producer gas" : "வாயு எரிபொருள்" அல்லது "விளைவு எரிபொருள்" :' நிலக்கீலார்ந்த நிலக்கரியிலிருந்து வாயுத் தயாரிப்பாளில் தயாரிக்கப்படும் ஒரு வாயு. சூடான காற்றுடன் கலக்கும்போது. ஒரே சீரான வெப்பத்தை உண்டாக்குகிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளில் கண்ணாடி உருகக்ப்படும் தொட்டிகளில் இது பயன்படுத்தப்படுகிறது

gas-filled lamp : (மின்) வாயு நிறை விளக்கு : காற்று வெளியேற்றப்பட்டு, பின்னர் அதில் நைட்ரஜனும் ஆர்கானும் கலந்த மந்த வாயுக் கலவை நிரப்பப்பட்ட ஒரு விளக்கு

gas-filled tube : (மின்) வாயுக் குழல்: காற்றுக்குப் பதிலாக, நைட்ரஜன், நியோன், ஆர்கோன், பாதரச ஆவி ஆகியவற்றில் ஏதேனு மொரு குறிப்பிட்ட வாயுவைக் கொண்டுள்ள குழல்கள்

gashing : (எந்.) ஆழ்ந்த வெட்டு: எந்திர உறுப்புகளைக் கரடு முரடாக வெட்டுதல். குறிப்பாக, சாய்வுப்பல்லிணைகளின் பற்களை வெட்டுதல்

gasket : (எந்) ஆவித் தடுப்பான்: (1)ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான்

(2) சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு கயிறு

gasoline : கேசோலின்: எளிதில் ஆவியாகித் தீப்பற்றக்கூடிய, பெட்ரோலியத்திலிருந்து வடித்தெடுக்கக் கூடிய நீர்மம். முக்கியமாக உள்ளெரி எஞ்சின்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது

gasoline engine : (தானி.) கேசோலின் எஞ்சின் : கேசோவிலும் காற்றும் கலந்த ஒரு கலவை எரிபொருளாகப் பயன்படுத்தப்