பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
331

யுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும்

கை ரம்பம் (படம்)

hand screw : கைத்திருகாணி : இரு இணையான அலகுகளும் இரு திருகாணிகளும் உடைய, மரத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பற்றிரும்பு. இரு திருகாணிகளும் ஒவ்வொரு அலகின் வழியாகவும் இயங்குவதன்மூலம் பற்றும் பிடிப்பும் ஏற்படுகிறது

hand tools : (பட்.) கைக் கருவிகள் : கையினால் செலுத்தப்படும் அல்லது இயக்கப்படும் கருவிகள்

hand turning : (பட்.) கைக் கடைசல்: கையால் இயக்கப்படும் கருவிகள் வாயிலாகக் கடைசல் வேலைப்பாடுகள் செய்தல்

hand vise : (பட்.) கைப் பற்றுகுறடு : இலேசான வேலைப்பாடுகள் செய்யும்போது கையால் பற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய பட்டறைப் பற்றுக்குறடு

hand wheel: (எந்.) கைச்சக்கரம்: கையினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். இது பெரும்பாலும் சீரமைவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது

hangar : விமானக் கூடாரம்: விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை

hanger: (க.க.) ஆதாரப் பட்டை : (1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை

(2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்

hanger bearing :(எந்.) ஆதாரப்பட்டைத் தாங்கி : ஓர் ஆதாரப் பட்டையினால் தாங்கப்படும் சுழல் தண்டுத் தாங்கி

hanger bolt : தாங்கு மரையாணி : ஒரு முனையில் நீண்ட திருகாணியும் மற்றொரு முனையில் எந்திர மரையாணி இழையும் சுரைகளும் உடைய மரையாணி

hanging core : (வார்.) தொங்கு உள்ளகம் : உள்ளகத்துடன் பிணைக்கப்பட்டுள்ள கம்பித் தொங்கலை ஆதாரமாகக் கொண்ட உள்ளகம். ஆழத்திற்குச் சென்று விடாமலிருப்பதற்காக இந்தத் தொங்கு உள்ளகங்கள் பயன்படுத்தப்படுகின்றன

hanging , indention : (வண்.) வெளி ஓர வெட்டீடு: ஒரு பத்தியின் முதல்வரி, வாசகத்தின் இடப்புறம் நீட்டியிருத்தல்

hanging stile : (க.க.) தொங்கு நிலை வரிச்சட்டம்: கதவு, சுவர், வேலி முதலியவற்றின் பாவு கூற்றில் நிலைக்கம்ப உறுப்பு

hard : கடினப் பொருள் : பற்ற வைக்கவோ உருக்கவோ முடியாத பொருள்

hard copy : (கணிப்.) திண்மைப் பகர்ப்புப் படி

hard brass : கடினப் பித்தளை : நீட்டப்பட்டபின்பு அல்லது உருட்டப்பட்ட