பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
330

முக்கியமாக நிறுத்துத் தடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடையை போட்டுவிட்டால், மீண்டும் கையினால் அத்தடை நீக்கப்படும்வரை அது அப்படியே இருந்து வரும்

hand dolly (உலோ.வே.) கைத் துடுப்பு : செவ்வக வடிவ எஃகுப்பாளம். இதன் அடிப்புறத்தில் ஒரு கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் 13x15x3 செ.மீ.அளவில் அமைந்திருக்கும். தீத்தாங்கிகளிலும்,தொட்டிகளிலும் பொருத்துவதற்கேற்ப இதன் செயல் முகப்பு வளைவாக இருக்கும்

hand drill : கைத் துரப்பணம் : கையினால் இயக்கப்படும் ஒரு துரப்பணம்

கைத் துரப்பணம்(படம்)

handed: கையுடைய: ஒரே மாதிரியான இரு உறுப்புகளை ஒன்றினை இடப்புறமாகவும். மற்றொன்றினை வலப் புறமாகவும் பயன்படுத்தும்போது அல்லது வேறேதேனும் உறுப்புடன் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் போது அது வலக்கையுடையதென அல்லது இடக்கையுடையதெனக் கூறப்படும். கருவிகள், அவை இடப்புறமாக அல்லது வலப்புறமாகப் பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன

hand feed : கையால் ஊட்டுதல் : எந்திரங்களில் மூலப்பொருள்களைக் கையால் செலுத்துதல்

hand file : (பட்.) கை அரம் : இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது

hand hook or hook wrench : (எந்.) கைக்கொக்கி அல்லது கொக்கித் திருக்குக்குறடு : ஒரு கொக்கியுள்ள நீண்ட சலாகை, இருசுகள் போன்ற வளைந்த உறுப்புகளை நேராக நிமிர்த்துவதற்குப் பயன்படுகிறது

handiwork : கைவினை : கையினால் நுட்பமாகச் செய்யப்படும் வேலைப்பாடு

handmade finish : கைமெருகு : சிலவகைக் காகிதங்களில் கையினால் செய்யப்பட்ட மெருகின் தோற்றத்தை உண்டாக்குதல், ஆனால் உண்மையில் இத்தோற்றம் கையினால் உண்டாக்கப்படுவதில்லை

hand miller : (எந்.) கையியக்க வெட்டுப்பொறி : கையினால் இயக்கி உலோகங்களில் வேலைப்பாடுகள் செய்வதற்கான சிறிய பொறியமைவு

handrail: (க.க.) கைபிடிக் கிராதி: கையினால் பிடித்துக்கொள்வதற்கு வசதியாகப் படிக்கட்டுகளில் அல்லது ஒரு மாடத்தின் விளிம்பில் அமைக்க்ப்படும் கைபிடி

handrail wreath: (க.க.) கைப்பிடி வளையம் : படிக்கட்டுக் கைபிடிக் கிராதியின் வளைவான பகுதி

hand rule : (மின்.) கைவிதி : மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு மின் கடத்தியினை, மின்னோட்டம் பாயும் திசையை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி வலதுகையால் பிடிக்குங்கால், மின் விசையின் விளைவுறு வரிகளின் திசையினை விரல்கள் குறிக்கும்

handsaw : (பட்.) கை ரம்பம் : மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடி