பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
383

keyed mortise and tenon : துளைப்பொருத்து மற்றும் பொருத்து முளை : நீட்டிய பொருத்து முளையுடைய ஒரு மூட்டு. இது மூட்டினை இறுக்குவதற்குப் பயன்படும் ஆப்பு இருசாணியை ஏற்கத் துளையிடப்பட்டிருக்கும்

keyhole caliper : (பட்.) பூட்டுத்துளை வடிவ விட்டமானி : ஒரு கால்

பூட்டுத்துளை விட்டமானி

நேராகவும், இன்னொரு கால் வளைந்தும் இருக்கும் ஒரு விட்டமானி

keyhose saw : பூட்டுத் துளை வடிவ இரம்பம் : பூட்டுத்துளைகள், சித்திர அறுப்பு வேலைகள் முதலிய வற்றுக்குப் பயன்படும் சிறிய கூம்பு வடிவ அலகுடைய இரம்பம்

key light: ஆதார விளக்கு : பொது வான விளக்கு வசதி

key plate : பூட்டுத்துளைத் தகடு : பூட்டுத் துளைக்குச் கவசமாக அமைக்கப்படும் சிறிய உலோகத் தகடு. இது மற்ற உலோகப் பகுதிகளின் வடிவமைப்புக்கு ஏற்புடையதாக இருக்கும்

key seat : (எந்.) ஆதார பீடம் : எந்திரத்தின் சுழல் தண்டில் அல்லது வண்டிச் சக்கரக் குடத்தில் இருசாணியை ஏற்பதற்கென உள்ள உட்புழை வரிப்பள்ளம் அல்லது இடைவெளி

key seat rule : (பட்.) ஆதாரபீட வரைகோல் : ஆதார பீடங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வரைகோல்

வரைகோல்

keystone : மையக்கல் : ஒரு வளைவு முகட்டில் மற்ற உறுப்புகளை ஒருங்கிணைக்கும் முகட்டுக்கல்

keystone distortion : (மின்.) கோடகத் திரிபு : தொலைக்காட்சியில் படம் கோடக வடிவில் இருக்குமாறு திரிபடைதல்

keystoning : ஒருங்கிணை முனைப்பு : தொலைக்காட்சியில், குறுகிய குவிமையத் தூரம் காரணமாக இணைகோடுகள் ஒருங்குகூட முனையும் போக்கு

keyway : (எந். ) சாவி வழி : ஏதேனுமொன்றைக் கட்டிப் பிணைப்பதற்காக சாவி நுழைக் கப்படும் வரிப்பள்ளம். வணரி, பல்லிணை, தப்பி சுழல்தண்டு போன்றவற்றில் இது அமைந்திருக்கும்

kick : மிகையொளி : பளபளப்பான பரப்பின் மீதான ஒளி. ஆதாரத்திலிருந்து பிரதிபலிப்பதால் உண்டாகும் தேவையில்லாத மிகை ஒளி

kick plate : (க.க.) உதைவிசைத் தகடு : மெருகுப் பூச்சு குலையாமல் தடுப்பதற்காக ஒரு கதவின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள உலோகத்தகடு

kid finish : தோல் மெருகு : பதனிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டித் தோலினைப்போல் தோற்றமளிக்கும் வகையில் மெருகு வேலைப்பாடு செய்யப்பட்டுள்ள காகிதம் அல்லது அட்டை

kill : (அச்சு.) அச்செழுத்து அழிப்பு : அச்சுக்கோப்பு செய்த எழுத்துப் பகுதியை ஒதுக்கிவிடுதல் அல்லது அழித்து விடுதல் அல்லது பயன்படுத்த வேண்டாமெனக் குறித்தல்

killed steel : (உலோ.) செறிவற்ற எஃகு : சட்டுவத்தில் அல்லது உலையிலுள்ள உருக்கிய எஃகு