பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37

படை மின்கலங்களில் மின்பகுப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது

amnesia : மறதிநோய் : மூளையில் காயம்படுவதனாலோ, தீவிர உணர்ச்சிப் பெருக்கத்தினாலோ ஏற்படும் நினைவிழக்கும் நோய்

amnion : கருச்சவ்வு : குழந்தை பிறப்பதற்கு முன்பு கருவை அடுத்துள்ள இரு சவ்வுகளின் உட்பகுதி

amoeba : அமீபா : ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது


amorphous: வடிவமற்ற : (1) திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது (2) (வேதியியல் குழைமவியல்) மணி உறுப்பெறா நிலை

ampere : (மின்.) ஆம்பியர் : மின்னோட்ட அலகு. ஒரு மின்னகம் ஒர் 'ஓம்' மூலமாகச் செலுத்தக்கூடிய மின்னோட்டம்

Ampere Andre Marie : ஆம்பியர் ஆண்ட்ரே மாரி : ஃபிரெஞ்சு இயற்பியலறிஞர் : அறிவியல் எழுத்தாளர் (1775-1836). மின்னோட்டத்தின் வலிமையை அளவிடுவதற்கான அலகுக்கு இவருடைய பெயர் (ஆம்பியர்) சூட்டப்பட்டுள்ளது

ampere hour : (மின்.) ஆம்பியர் மணி : சேமக் கலங்களின் திறன்வீதத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒருமணி நேரத்தில் ஒர் ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதை இது குறிக்கிறது

ampere-hour capacity : (தானி.) மணித் திறம்பாடு : ஒரு சேமக் கலத்தின் கொள்திறனைக் குறிக்கப் பயன்படும் சொற்றொடர். 100 ஆம்பியர் மணித் திறம்பாடுடைய ஒரு சேமக்கலம். ஒருமணி நேரத்தில் 100 ஆம்பியர் மின்னோட்டம் வழங்கக்கூடியதாக இருக்கும்

ampere meter : (மின்.) ஆம்பியர் மானி : மின்னாற்றல் மானி (ammeter) போன்ற ஒரு சாதனம், பாயும் மின்னோட்டத்தின் அடர்த்தியைப் பதிவு செய்வதற்குப் பயன்படுகிறது

ampere turn : ஆம்பியர் சுற்று : ஒரு மின் காந்தத்தின் வலிமையை அளவிடும் அலகு. காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுற்றுகளின் எண்ணிக்கையை, அதன் வழியே பாயும் ஆம்பியர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் இந்த அளவு கிடைக்கும்

amphibia : நிலநீர் வாழுயிர் : தவளைகள், தேரைகள, சலாமான்டர் போன்று நிலத்திலும் நீரிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள்


amphibian : (வானு.) நிலம், நீர் ஊர்தி : நிலம், நீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம். நிலத்திலிருந்து அல்லது நீரிலிருந்து உயரே எழுந்து பறக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானூர்தி

amplidyne : மின்திறன் பெருக்கி : ஒரு மாற்று மின்னோட்டப் பணிப்பு மின்னோடியை இயக்குவதற்கு, ஒரு நேர் மின்னாக்கியின் கள மின்னோட்டத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மின் உற்பத்தி அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில்