பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
453

nylon : (குழை.) நைலான் : குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் பிசின் கெட்டியானது; அதிக வெப்பத்தையும் உராய்வையும், வேதியியல் எதிர்ப்பையும் தாங்கக் கூடியது. இதன் இந்தப் பண்புகளினால் இழைகளில் மட்டுமின்றி, எண்ணெய் வயல், கடல் போன்ற இடங்களிலும் எந்திரங்களில் இதனைப் பெருமளவில் பயன்படுத்த முடிகிறது