பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

தில் அல்லது வரைபடத்தில் நமது கண் நாடும் ஒரு மையப்பகுதி. இது உள்ளபடியான மையத்திற்கு மேலே, மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பகுதியாக இருக்கும்

optical distortion; (குழை) காட்சித் திரிபு: ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் வழியாகப் பார்க்கும் போது தோன்றும் தோற்றத் திரிபு பிளாஸ்டிக்கின் ஒரு சீர்மையற்ற காட்சித் தன்மையினால் உண்டாகிறது

optical pyrometer: ஒளியியல் மின்முறை வெப்பமானி: கடும் வெப்பத்தினால் உண்டாகும் நிறத்தையும், மின்னோட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சூடாக்கப்பட்ட கம்பியின் நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து உயர்ந்த அளவு வெப்பத்தை அளவிட உதவும் சாதனம்

orbit: (விண்.) கோளப்பாதை: ஒரு வான்கோளம் இன்னொரு கோளத்தைச் சுற்றிவரும் பாதை

order: (1) (க.க.) மரபொழுங்கு: ஒரு கட்டிடக்கலைப் பாணியின் தனிச்சிறப்பான மரபொழுங்கு

(2) (தாவ.) இனக்குழுமம்: தாவர வியலில் ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த குழுமம்

(3) (கணி.) படிமுறை: கணிதவியலில், அடுக்குத் தொடரின்படி முறை எண்ணின் மதிப்பளவு

orders of architecture: (க.க) கட்டிடக் கலைப்பாணிகள்: கட்டிடக் கலையில் பழைமையான ஐந்து பாணிகள். அவை: டாஸ் கன் பாணி, டோரிக் பாணி; அயோனிக் பாணி, கோரிந்தியன் பாணி, கலவைப்பாணி

ordinate: (கணி) நாண்வரை: வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டுக்கு இணையான வரை

ore: (கனிம.) தாது: உலோகம் கலந்துள்ள பாறை, இதிலிருந்து உலோகங்கள் எடுக்கப்படுகின்றன

organic: (வேதி.) கரிமப் பொருள்: விலங்குகளிலிருந்தோ, தாவரங்களிலிருந்தோ இயற்கையாக கரிமச்சேர்க்கையுடைய பொருள்

organism: (உயி..) உயிரி: விலங்கு, தாவர இன உயிர்களில் ஒன்று. மனிதன் சிக்கலான உறுப்பமைதியுடைய ஓர் உயிரி. அமீபா ஒரே உயிரணுவுடைய ஓர் உயிரி

oriel : (க.க.) தொங்கற் பலகணி: சுவர் ஆதாரத் தண்டயக் கைகள் மீதமர்ந்த பல்கோணத் தொங்கற் பலகணி

orient : கீழ்த்திசை : கீழ்த்திசைக் குரிய

oriental walnut: கீழ்த்திசை வாதுமை: இது ஒருவகை மரம். இதனைக் 'கீழ்த்திசை மரம்' என்றும் கூறுவர். பெரிய வடிவளவில் வளரும் ஆஸ்திரேலிய மரவகை. அலங்கார அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

oriantation : திசைத் தொடர்பு நிலை : கிழக்குத் திசைபான திசைத் தொடர்பமைவு. ஓர் விளையாட்டரங்கம், விளையாடும் வீரர்களின் கண்களில் சூரியஒளி படாதவாறு அமைக்கப்படும்

orifice : (பற்) புழைவாய் : வாயுக்கள் பாய்வதற்கான துவாரம். இந்தப்புழைவாய் ஓரதரினால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்

Original : மூலப்படிவம் : பிறி தொன்றை மூலமாகக் கொள்ளாத மூல முதற்படி. வேறொன்றைப் பார்த்துப் பின்பற்றத்தக்க, தற்பண்பு வாய்ந்த படைப்பு