பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

peg : ஆப்பு : அறைகலன்களின் உறுப்புகளை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு ஆணிகளுக்குப்பதிலாகப் பயன்படும் மரத்தினாலான முளை

pellயcid : தெள்ளத் தெளிவான : தெள்ளத் தெளிவான, ஒளி எளிதில் ஊடுருவிச் செல்ல்க்கூடிய

peltier effect (மின்.) இணைப்பு மின்னோட்ட விளைவு : ஒன்று போல் இல்லாத இரண்டு பொருள்களின் இணைப்பைச் சுற்றியுள்ள பரப்பில் வெப்பத்தை குறைப்பதற்காக அந்த இணைப்பின் வ்ழியாகப் பாயும் மின்னோட்டத்தின் செயற்பாடு

pelvis : (உட.) இடுப்பெலும்பு : கால்கள் இணைக்கப் பட்டிருக்கும்.உடலின் இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள்

pendant: , பதக்கம்: கழுத்தணியில் கோக்கப்பட்டுள்ள தொங்கணி

pendant switch : (மின்.) பதக்க விசை : முகட்டிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள் ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது

pendulum : ஊசல் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து தொங்குகிற ஒரு பொருள். இது கடிகாரத்தின் ஊசல் போன்று இருபுறமும் தங்கு தடையின்றி ஊசலாடக்கூடியது

penetrating oil : ஊடுருவு எண்ணெய்: துருப்பிடித்த அல்லது அரிக்கப்பட்ட உறுப்புகளை எளிதாக இயக்குவதற்குப் பயன்படுத் தப்படும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஒரு தனி வகை எண்ணெய்

penetration (பற்.) ஊடுருவுத்திறன் : மதிப்புக் குறைந்த உலோகத்தினுள் ஊடுருவிச் செல்லும் திறனளவு. இது அந்த உலோகத்தின் மேற்பரப்பைக் கொண்டு அளவிடப்படுகிறது

penetromater: (குழை.) ஊடுருவு மானி : திடப்பொருள்களின் மேற் பரப்பில் ஊடுருவும் திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி

penicillin; (மருந்.) பெனிசிலின் : பூஞ்சக் காளானில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. நோய் நுண்மங்களை அழிக்கும் மருந்துகளில் மிகுந்த வலிமையுடையது. இது நோயாளிக்குத் தீங்கு எதுவும் செய்வதில்லை

penny: (மர;வே.) பென்னி: ஆணிகளின் நீளத்தைக் குறிக்கும் ஒரு சொல். பத்துப் பென்னி என்பது ஒர் ஆணியின் 3" நீளத்தைக் குறிக்கும். ஆதியில் 'பென்னி' என்பது நூற்றுக்கு விலையைக் குறித்தது

panny-weight: பென்னி எடை : இருபத்து நான்கு குன்றிமணி எடை அளவு

pentagon: (கணி.) ஐங்கோணம்: ஐந்து பக்கங்கள் கொண்ட ஒர் உருவம்

pentode: (மின்.) ஐம்முனையம்: கம்பியில்லாத் தந்தி தடுக்கிதழ்களில் ஐந்து மின் வாய்கள் கொண்ட எலெக்ட்ரானிக் குழல்

penumbra; அரைநிழல்: பூமி, நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம்

percentage: (கணி ;எந்.)விழுக்காடு: நூற்றில் பகுதி; சதவீதம்: நூற்று விழுக்காடு

percentage of modulation: (மின்.) அலைமாற்ற வீதம்: இயல்