பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
473

சலை ஊசிமூலம் செலுத்தி தீத் தடைக்காப்பு செய்யும் முறை

peak : (மின்.) உச்ச மின்னழுத்தம்: ஒரு குறிப்பிட்ட சுழற்சியின்போது மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம், மின்னோட்டம் அல்லது மின் விசை

peaking coil: (மின்.) உச்ச நிலைச் சுருள்: பகிர்மானம் செய்த கொண்ம விளைவினைக் குலைப்பதற்காக ஒர் உயர் அலைவெண் மின் சுற்றுவ்ழியில் உள்ள ஒருசிறு தூண்டு கருவி

peak inverse voltage : (மின்,) உச்சநிலைத் தலைகீழ் மின்னழுத்தம்: ஒர் இரு முனையத்தின் குறுக்கே எதிர்மாறான திசையில் செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் அளவு

peak load : (மின்) உச்ச மின் விசை : ஒரு மின்னாக்கி அல்லது மின்விசை உற்பத்தி அமைப்பு, 20 மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இன்ட்வெளிகளில், மிக உயர்ந்த அள்வு வழங்கும் மின் விசையின் அளவு

peak value : (மின்.) உச்ச மதிப்பு: மாற்று மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் உச்ச மதிப்பளவு

pearl : (வேதி.) முத்து : இது அரும்பொருள்களில் ஒன்று. முத்துச் சிப்பியில் கால்சியம் கார்பொனேட் என்ற வேதியியற் பொருளினால் உண்டாகிறது

pearling : இழை முடிப்பூவேலை : இழைமூடி கண்ணியிட்டுச் செதுக்கிப் பூவேலைப்பாடுகள் செய்தல்

pearlite : (உலோ.) பியர்லைட் : கார்பனும் இரும்பும் கலந்த எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய உலோகக் கலவை இதில் 0.9% கார்பன் கலந்திருக்கும்

pearwood : பேரிமரம் : இளம்பழுப்பு நிறமுடைய, நெருக்கமான மணிக்கரன் அமைந்த ஒரு வகை மரம். மிதமான கடினத்தன்மையுடையது. வரைவாளர்கள் T-சதுரம், முக்கோணங்கள் முதலியவை செய்யப் பயன்படுகிறது

peat : (வேதி.) புல்கரி : ஒரளவு கார்பனாக்கிய தாவரக் கனிமப் பொருள். எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தோண்டியெடுக்கும்போது இதில் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் இத்னை அழுத்தி, உலர்த்தி எரி பொருளாகப் பயன்படுத்த வேண்டும்

pebble dash : ( க.க.) கூழாங்கல் பதிப்பு : சாந்து அல்லது சிமென்ட் பூசிய சுவர்களில் கூழாங்கற்களைப் பதித்து அலங்கார வேலைப்பாடு செய்தல்

pedestal : நிலை மேடை : தூண் நிலை போன்றவற்றின் அடிப் பீடம்

pedestal : (மின்) ஒளி மதிப்பளவு: தொலைக்காட்சியில் கறுப்புப்பட மதிப்பளவினைக் குறிக்கும் ஒளிச் சைகையின் மதிப்பளவு

pediment : ( க.க.) முக்கோண முகப்பு முகடு : பண்டையக் கிரேக்க கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட வரி முக்கோண முகப்பு முகடு

pedometer: அடியீடுமானி: காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி

peen (எந்.) சுத்தி மென் நுனி: உலோக வேலைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சுத்தியல் தலைப்பின் மெல்லிய நுனி

peening : (உலோ.வே.) சமதளமாக்கல் : சுத்தியலின் தலைப்பின் மென் நுனியினால் ஒர் உலோக மேற்பரப்பினை அடித்தல் அல்லது சமதளமாக்குதல்